பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 I

அகில இந்திய கிராமக் கைத்தொழில் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டபோது, அதன் கொள்கைகளே நடை முறையில் விளக்குவதற்காகக் காங்தியடிகள் மகன் வாடிக்கு வங்து தங்கியிருந்தார். அன்றாட ஆசிரம வேலைகளில் அங்கிருப்போர் எல்லோரும் பங்கு கொள்ள வேண்டு மென்பது விதி. ஆசிரமத்திலுள்ள சமையல் கூடத்தையும், அங்குள்ள தட்டுகளையும், பிற சாமான்களையும் துலக்குவது அப்பணிகளில் ஒன்று. ஒரு காள் காந்தியடிகளின் முறை வங்தது. அவருக்குத் துணையாளராகக் குமரப்பாவும் இருந்தார். இருவரும் தேங்காய் காரையும், சாம்பலையும், மண்ணையும் கையில் எடுத்துக்கொண்டு பாத்திரங்களேத் துலக்கத் தொடங்கினர். அப்போது அன்னே கஸ்துசரிபாய் அப் பக்கமாக வங்தார். உலகம் போற்றும் மகாத்மாவாகிய தம் கணவர், முழங்கை வரை சேற்றிலே தோய்த்துக் கொண்டு அப்பணியைச் செய்வதை அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

“ஏன்? இவ் வேலையை நீங்களே செய்ய வேண்டுமா? வேறு யாரையாவது செய்யச் சொன்னுல் ஆகாதா? உங்க ளுக்கு எவ்வளவோ வேறு வேலைகள் இருக்கலாம். அதைப் போய்ச் செய்யுங்கள். கொடுங்கள் இப்படி!” என்று சொல்லி வெடுக்கெனப் பாத்திரத்தைக் காங்தியடிகளிட மிருந்து பிடுங்கித் தாம் துலக்கத் தொடங்கினர்.

காங்தியடிகள் உடனே சிரித்த வண்ணம், “குமரப்பா! ர்ே மிகவும் கொடுத்து வைத்தவர்! உம்மை இவ்வாறு மிரட்டிப் பணிய வைக்க உமக்கு ஒரு மனைவியில்லை; என்னுடைய வேலையைச் செய்ய என் மனைவியைப் பிரதி கிதியாக ஏற்படுத்துகிறேன். மன்னித்து விடு!” என்று கூறிவிட்டு, அவ்விடத்தை விட்டு அகன்றார்.

not  : ‘குஜராத் சபா’ என்ற கழகம், குஜராத்தி மக்களிடம் அரசியல், பொருளியல், சமூகவியல் வளர்ச்சிக்குப் பாடு

ம. 18