பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200

செய்திகளே இருக்கும். அவற்றைப் படித்துப் பார்த்து, முக்கியமானவற்றிற்கு மட்டும் பதில் எழுத வேண்டும்” என்றார் கோஷால். காந்தியடிகள் அவ் வேலையில் ஈடுபட் டார். நல்ல முறையில் செய்து முடித்தார்.

அதற்குள் காங்தியடிகளைப் பற்றிப் பிறரிடம் விசாரித்து அறிந்துகொண்ட கோஷால், “அடடா உமக்குக் குமஸ்தா வேலை கொடுத்தேனே!” என்று வருத்தப்பட் டார்.

“அதைப் பற்றிக் கவலே வேண்டாம்! காங்கிரஸ் தொண்டு எதுவானல் என்ன? இம்மாதிரி சில்லறை வேலை களில்தான் எனக்கு அநுபவம் வேண்டும்!” என்றார் காந்தி யடிகள்.

  • ஒரு நாள் கிராம சேவை செய்யும் தொண்டர்கள் சிலர் காந்தியடிகளைக் காண வங்கார்கள். ‘முதலில் கிரா மத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். தோட்டி வேலைகூட நீங்களே செய்ய வேண்டும்” என்று காந்தியடிகள் அவர்களைப் பார்த்துச் சொன்னர்.

தோட்டி வேலை செய்தால் கிராம மக்கள் பிறகு கம்மை மதிக்கமாட்டார்கள். ஆகையில்ை கிராமத்தில் பிற தொண்டுகளைச் செய்ய முடியாத கிலேமை ஏற்பட்டுவிடும்’ என்று அந்தத் தொண்டர்கள் அடிகளிடம் கூறினர்கள். காந்தியடிகள் அவர்களுடைய கூற்றை ஒப்புக்கொள்ள வில்லை. அடுத்த காளிலிருந்து காலேயில் எழுந்தவுடன், ஒரு தோண்டியும் சிறு மண்வெட்டியும் எடுத்துக்கொண்டு இளம்புவார். அருகிலுள்ள கிராமத்திற்குச் செல்வார். பாதையில் கிடக்கும் மலத்தையும், அசுத்தங்களேயும் தோண்டியில் எடுத்துப் போட்டுக்கொள்வார். பிறகு அவைகளைக் கொணர்ந்து ஆசிரமத்திலுள்ள குழியில்

கொட்டி எருவாக்குவார்.