பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204

வைக்கப் போதிய வசதியில்லாத காரணத்தால், ஒரு இங்திய வணிகரின் மாளிகையில் தங்க ஏற்பாடு செய்தார். அவ ருடைய எல்லாத் தேவைகளையும் காந்தியடிகள் மிகவும் துணுக்கமாகக் கவனித்து வந்தார். திரு. கோகலே அப் போது சக்கரை கோயி(diabetes)ளுல் வருங்திக் கொண்டிருங் தார். எனவே அவருக்கு உணவு தயாரிக்கும் பணியில் மிகவும் எச்சரிக்கையோடு காங்தியடிகள் இருந்தார். தம் நண்பரான திருவாளர் போலக்கின் மனேவியான மில்லி’ யின் துணேக் கொண்டு தாமே சொட்டியையும், உருளைக் கிழங்கையும் கெருப்பின் மேலிட்டுச் சுட்டு எடுத்தார். ஒரு பொருளே எண்ணெயில் பொரிப்பதை விட, அல்லது நீரில் வேக வைப்பதை விட அனலில் போட்டு வேகவைத்தால் அதிலுள்ள சர்க்கரைப் பொருள் (starch) அதிகமாக வெளி யேற்றப்படும். இதை உணர்ந்துதான் காந்தியடிகள் தம் இடையருத அரசியல் பணிகளினிடையிலும் இச்சிறு வேலையை அன்புடன் மேற்கொண்டார்.

1909-ஆம் ஆண்டு இலண்டன் மாநகரில் வாழ்ந்த இந்திய மாணவர்களெல்லாம் ஒன்று கூடிக் காந்தியடி களுக்கு ஒரு விருந்தளிக்க எற்பாடு செய்தனர். அவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள் விநாயக தாமோதர சவர்க்கார், வ. வெ. சுப்பிரமணிய அய்யர், டாக்டர் தி. சே. சென. இராசன் ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள். காங்தி யடிகள் அப்போது தென்னுப்பிரிக்காவில் வழக்கறிஞராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். அ ேத டு அரசியல் தொண்டிலும் ஈடுபட்டுத் தென்னப்பிரிக்க இந்தியரின் கலனுக்காகவும் பாடுபட்டு வந்தார். அவருடைய புகழ் இங்கிலாங்கிலும் பரவி யிருந்தது. வ. வெ. க. அய்யரைத் தவிர மற்றவர் யாரும் காக்தியடிகளைக் கண்டதில்லை.

காங்தியடிகளின் விருப்பத்திற்கிணங்க அவ்விருங்தில் மரக்கறி உணவே பரிமாறுவதென்று ஏற்பாடு செய்யப்