பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

இங்கிலாந்தில் சிறந்த வழக்கறிஞராக விளங்கிய பிரட ரிக் பிஸ்கட் என்பவரை ஒரு நாள் சந்தித்துக் காந்தியடிகள் உரையாடினர். வழக்கறிஞர் தொழிலைப்பற்றி அறிவுரை வழங்குமாறு அவரைக் கேட்டார். அவர் கன்சர்வேடிவ் கட்சியைச்சார்ந்தவராக இருந்தாலும் இந்திய மாணவர்கள் பால் அன்பு கொண்டவர். காந்தியடிகளின் கவலைகளைக் கேட்டு நகைத்தார். அவர் கூறியதாவது:- “ஒவ்வொருவரும் பிரோளிஷா மேத்தாவாக இருக்க வேண்டுமென்று கினைக்கின்றீரா? பிரோஸிஷாக்களும் பட்ரூடின்களும் ஓரிருவரே இருக்க முடியும். சாதாரண வழக்கறிஞராக இருப்பதற்கு அத்தகைய வியத்தகு திறமை எதுவும் வேண்டியதில்லை. இதை உறுதியாக நம்பும். சாதாரண முயற்சியும் கண்ணியமும் இருந்தால் போதும், கம் வாழ்க்கைக்குரிய வருவாய் கிச்சயம் கிட்டும். வழக்குகள் எல்லாமே சிக்கல் உள்ளவைகளாக இரா. உமக்குரிய கவலை என்னவென்று எனக்குப் புரிகிறது. உமது பொதுப்படிப்பு மிகவும் சொற்பம். வழக்கறிஞர் தொழிலுக்குப் பொது அறிவு மிகவும் இன்றியமையாதது. உமக்கு அது தான் இல்லை. இந்திய வரலாறு கூட நீர் படித்ததில்லை. வழக் கறிஞர் தொழில் செய்பவனுக்கு மனிதப் பண்பைப் பற்றி கன்கு தெரிந்திருக்க வேண்டும். ஒரு மனிதனுடைய பண்பு களே அவன் முகத் தோற்றத்திலிருந்து அறியும் ஆற்றல் வேண்டும். மேலும் இந்தியன் ஒவ்வொருவனுக்கும் இந்திய வரலாறு தெரிய வேண்டாமா? வக்கீல் தொழிலுக்கும் அதற்கும் தொடர்பில்லே என்றாலும் வரலாற்றறிவு மிகவும் தேவை. கேயும்’ ‘மாலிசனும் இயற்றிய 1857-ஆம் ஆண்டுச் சிப்பாய்க் கலகத்தைப் பற்றிய வரலாற்றைக் கூட நீர் படித்ததில்லை. உடனே அதை வாங்கிப்படியும். மனிதப்பண்பை முகத்தில் படித்தறிவதற்கு லவேடர்’, ‘ஷம்மல் பென்னிக் என்பவர்கள் எழுதிய இரண்டு நூல் களையும் உடனே வாங்கிப்படியும்.”

8.