பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 I

அரசியல்வாதிகளும். சீர்திருத்தவாதிகளும், தங்களுடைய கொள்கை சரியானது என்று பட்டால், பிடிவாதமாக இருந்து அதை கிலே நாட்டத் தவறுதில்லை. குறிப்பாகச் சொன்னல் பிடிவாதம் அரசியல்வாதிகளுக்கு இன்றியமை. யாத ஒரு அரும்பண்பாகும்.

காங்தியடிகளும் அவருடைய தென்னப்பிரிக்க நண்பர் களும், காங்கிரஸ் உறுப்பினர் சேர்ப்பதற்காக கேடாவில் உள்ள தொலைவான ஊர்களுக்கும் செல்லுவதுண்டு. ஆங்காங்கிருந்த இந்திய வணிகர்கள் உற்சாகமாக வரவேற்று விருந்தளித்து, உறுப்பினராகவும் சேருவார்கள். பல இடங்களிலிருந்து காங்தியடிகளுக்கு அழைப்பு வங்து கொண்டிருந்தது.

இத்தகைய சுற்றுப்பயணத்தின்போது, ஒருமுறை ஒரு ஊரில் இக்கட்டான கிலேமை ஏற்பட்டது. அங்த ஊரில் யாருடைய விருந்தாளிகளாகக் காங்தியடிகளும் நண்பர் களும் தங்கினர்களோ, அங்த மனிதர் நல்ல பணக்காரர். அவரிடமிருந்து ஆண்டுக்கு ஆறு பவுன் சங்தா எதிர்பார்த் தார்கள். அவரோ மூன்று பவுண் தான் கொடுப்பேன் என்று பிடிவாதம் பிடித்தார். கொடாக்கண்டர்-விடாக் கண்டர் கதை கடந்தது. அவரிடம் மூன்று பவுன் வாங்கி விட்டால் மற்றவர்கள் யாரும் அதற்குமேல் கொடுக்க மாட்டார்கள். தேவைப்பட்ட தொகை சேராது. எனவே வெகுநேரம் வரையில் விவாதம் நீடித்தது. ஒருவரும் சாப்பிட்ட பாடில்லே.

எல்லோருக்கும் பசி அதிகமாயிருந்தாலும், ஆறு பவுன் வசூலிக்காமல் சாப்பிடுவதில்லை என்று உறுதியாயிருந்தார் கள். அந்த வணிகரும் வழிக்கு வருபவராகத் தெரியவில்லை, அதே ஊரைச் சேர்ந்த மற்ற வணிகர்கள் மன்றாடியும் பயனில்லை. இரவில் பெரும்பகுதி இவ்விதம் கழிந்த பிறகு.