பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$66

அப்பொழுது மாலே 7 மணி இருக்கும். ஒரு கெசவாளியின் வீட்டிலே தங்க ஏற்பாடாகி யிருந்தது. காள்தோறும் தம் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு தம்முடைய அடிகளைச் சுடு ரோல் கழுவிக் கொண் டு ஏதேனும் எழுதுவது வழக்கம். அதற்குள் மனுகாங்தி குளிப்பதற் காக வெங்ர்ே போடுவாள். பிறகு காங்தியடிகள் குளித்துக் கொள்வார்.

காங்தியடிகள் எப்பொழுதும் குளிக்கும் போது சே ப் பைப் பயன்படுத்துவதில்லே. சொரசொரப்பான கல்லயே அழுக்குத் தேய்க்கப் பயன்படுத்துவார். அந்தக் கல் பல ஆண்டுகளுக்கு முன்பாக மீராபென் என்ற அம்மை யாரால் அவருக்குக் கொடுக்கப்பட்டது. அந்தக் கல் மறு நாள் காலேயில் தேடும்போது கிடைக்கவில்லை அக்கல்லை முதல்நாள் தங்கியிருந்த இடத்திலேயே விட்டுவிட்டு வந்து விட்டாள் மனு. அவள் காக்தியடிகளே நோக்கி, பாபு நீங் கள் உடம்புத் தேய்த்துக்கொள்ளப் பயன்படுத்தும் கல்ல எங்கோ தவறவிட்டுவிட்டேன். காம் கேற்றுத் தங்கியிருந்த வீட்டில் வைத்துவிட்டு வந்துவிட்டேன் போலிருக்கிறது. இப்போது என்ன செய்வதென்று புரியவில்லை’ என்று நடுங்கும் குரலில் சொன்னாள்.

காந்தியடிகள் சிறிது கேரம் பேசாமல் இருந்தார். பிறகு, “மனுதி! நீ உண்மையில் தவறு செய்துவிட்டாய் என்பதில் ஐயமில்லை. நீ திரும்பிச்சென்று அக்கல்லைத் தேடி எடுத்துவர வேண்டும் என்று விரும்புகிறேன். கிர்மல் பாபுவை எனக்கு சமையல் செய்யச்சொல்லு. மீ தனியாகச் சென்று அக்கல்லைத் தேடவேண்டும், அவ்வாறு செய்தால் தான் மறுமுறை அதைத் தவறவிடமாட்டாய்” என்று கூறினர்.

மனு, காங்தியடிகளிடம், ‘பாபு! இங்கு பல தொண்டர் கள் இருக்கிறார்கள். அவர்களில் யாரையேனும் உடன் அழைத்துச் செல்லட்டுமா?” என்று கேட்டாள்.