பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

299

கின்றார். கா எழவில்லை: கண் மங்கலடைந்தது; உடல் கடுங்கியது. இத்தனைக்கும் அச்சொற்பொழிவு ஒரு பக்கத் திற்குமேல் இருக்காது. அதைக்கூட அவரால் படிக்க முடியவில்லை. எனவே அருகிலிருந்த திருவாளர் மஜூம்தார் என்பவர் காந்தியடிகளின் பொருட்டு அச்சொற்பொழிவைப் படிக்க வேண்டியதாயிற்று. அவருடைய சொற்பொழிவு மிக கண்ருயிருந்தது. சபையிலிருந்தோர் கேட்டு மகிழ்க் தனர்; ஆரவாரம் செய்தனர். காங்தியடிகள் மிகவும் வெட்கமடைந்தார். தம் திறமையின்மையை எண்ணித் துயரப்பட்டார்.


மோகனதாளின் தமையனர் அவரைப்பற்றி ஆகாயக் கோட்டைகள் கட்டியிருந்தார். பாரிஸ்டர் தேர்வில் வெற்றி பெற்று வந்திருக்கும் தம் தம்பி, பேரும் புகழும் பெற்று வழக்கறிஞர் தொழிலில் கிறையப் பணம் சம்பாதிக்கப் போகிறார் என்று கம்பியிருக்தார். எனவே இலண்டனிலிருந்து திரும்பி வந்ததும், தம் தம்பி தொழில் தொடங்குவதற்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளும் செய்து வைத்திருந்தார்.

பம்பாயில் தம் தொழிலத் துவக்கினர் காக்தி யடிகள். முதன் முதலாக பம்பாய் ஸ்மால் காஸ் கோர்ட் ஒன்றில், ஒரு சிறு வழக்கில், மமிபாய் என்னும் பெண்மணி யின் சார்பாக வாதிடச் சென்றார். வழக்கில் மமிபாய் பிரதி வாதி, எனவே, வாதிதரப்புச் சாட்சிகளைப் பாரிஸ்டர் மோகனதாஸ் காங்தி குறுக்கு விசாரணை செய்ய வேண்டி யிருந்தது. முதல் சாட்சியைக் குறுக்கு விசாரக்ண செய்வ தற்காக எழுங்தார். ஆனல் ஒன்றும் கேட்கத் தோன்ற வில்லை. தலே சுழலத் தொடங்கியது. திே மன்றமும், திே பதியும், சாட்சிகளும் ஆகிய எல்லாருமே சுழல்வது போலத் தோன் றினர். கேள்வி எதுவும் கேட்காமலேயே தம் இருக் கையில் அமர்ந்து கொண்டார். கட்சிக்காரி மமிபாயின்