பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

பிற்பகல் மூன்று மணி சுமாருக்கு வண்டி பர்தேகோப் என்ற இடத்தை அடைந்தது. உள்ளே இருந்த வண்டித் தலைவனுக்கு உல்லாசம் பிறந்து விட்டது. வெளியில் வங்து புகைப் பிடிக்க விரும்பின்ை. வண்டியோட்டி, காலே வைத்து ஏறுவதற்கு வண்டியில் ஒரு படி அமைந்திருந்தது. வண்டியோட்டியிடமிருந்து ஒரு கிழிந்த சாக்குத்துண்டை வாங்கி, அப் படியின் மேல் விரித்தான் தலைவன். அச் சாக்குத் துண்டு அழுக்கடைந்த கங்தல். அவன் காந்தியா ரைப் பார்த்து, “ஏய் சாமி* இந்தப் படியின் மேல் உட்கார். நான் வண்டியோட்டியின் அருகில் அமர்ந்து புகைப் பிடிக்க வேண்டும்.” என்று சொன்னன்.

இக் கொடுமைக்கு அடிபணிய காந்தியடிகளின் உள்ளம் இணங்கவில்லை. அவருடைய மான உணர்ச்சி தலை துக்கி கின்றது. ஆல்ை உள்ளத்துள் என்ன நேருமோ? என்ற அச்சம் தோன்றியது. அவருடைய உடலெல்லாம் நடுங்கியது. அவர் வண்டித் தலைவனப் பார்த்து, “நீ கியாய் மாக வண்டிக்குள் எனக்கு இடம் கொடுத்திருக்க வேண்டும். ஆனல் அவ்வாறு செய்யாமல் என்னே வெளியில் உட்காரச் சொன்னுய். அதை நான் பொறுத்துக் கொண்டேன். ஆனல் இப்போது உன் காலடியில்

சாமி என்ற சொல் தென்னப்பிரிக்காவில் வாழ்ந்த இந்தியர்களுக்கு வெள்ளையர்களால் வழங்கப்பட்ட பொதுப் பெயர். தென்னுப்பிரிக்காவில் கூலிகளாகச் சென்ற இந்தியர் களில் பெரும்பாலோர் தமிழர். இராமசாமி, கந்தசாமி, பெரியசாமி, பெருமாள்.சாமி என, அவர்கள் பெயர் பெரும் பாலும் அமைந்திருந்த காரணத்தால் ‘சாமி என்று அழைக்

கப்பட்டனர். சில தைரியமான இந்தியர்கள், ‘ ‘சாமி” என்றால் எசமான் என்று பொருள். எங்களைச் சாமி என்று துழைக்கிறீர்களே! நாங்கள் உங்களுடைய எசமான’

என்று துணிந்து கேட்டு விடுவார்கள். பிறகு அவர்களுடைய உயிர் தப்புவது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.