பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57

களுக்கு அறிவுரை கூறினர் காந்தியடிகள். அஹிம்சையின் உயர்வுதான் என்னே! அவ்விகளஞர்கள் கருப்புக் கொடி காட்டிக் குழப்பம் விளேவித்த போது, காந்தியடிகள் சினங் கொண்டிருந்தாலோ, அல்லது போலீஸ்காரர்களை விட்டு அவர்கள் வாயை அடக்க முயற்சி செய்திருக்தாலோ நிலைமை தலே கீழாக மாறியிருக்கும்; அவ்விளைஞர்களின் உள்ளமும் மாறியிருக்காது.


நவகாளியில் இந்து-முஸ்லீம் கலகம் தீவிரமாக நடந்து கொண்டிருக்கது. குருதியாறு பெருக்கெடுத்து ஒடிக் கொண்டிருந்தது. காங்தியடிகள் நவகாளியில் அமைதியை நிலைநாட்டுவதற்காகப் புறப்பட்டார். ஆனல் கல்கத்தா விலும் கலவரம் மிகுந்திருப்பதைக் கேள்விப்பட்டு, நவகாளிப் பயணத்தை ஒத்தி வைத்துவிட்டுக் கல்கத்தாவில் இறங்கினர். கல்கத்தாவில் பெலிகட்டா என்பது ஒரு பகுதி’ அது முஸ்லீம்கள் வாழ்ந்த பகுதி. அங்கிருந்த முஸ்லீம்கள் எல்லோரும் அடியோடு கொல்லப்பட்டனர். அப்பகுதி யிலிருந்த ஹைதரிமாளிகை என்ற கட்டிடத்தில் அடிகள் தங்குவதென்று முடிவாயிற்று.

அவ்வீடு தாப்மையற்றிருக்கது. வசதியற்றிருந்தது: பாதுகாப்பற்றிருந்தது. கதவுகளும், பல கணிகளும் உடைத் தெறியப்படடிருக்தன. அவ்வீடு தாய்மைப்படுத்தப் பட்டது. அடிகள் அதில் தங்கினர். 18-8-47-ஆம் நாள் காலையில் கலகக்கார இந்து இளேஞர்களின் கூட்ட மொன்று ஹைதரிமாளிகையை நோ க் கி வந்தது. அவ்விகளஞர்கள் காங்தியடிகளைக் கண்டு “நீங்கள் ஏன் இங்கு வக்தீர்கள்? முஸ்லீம்களுக்கு இழைக்கப்பட்ட சிறு துன்பத்தைக் கேள்விப்பட்டவுடன், நீர் இங்கு ஒடோடியும் வந்திருக்கிறீரே! இக்துக்களுக்கு அளவற்ற இன்னல்கள் முஸ்லீம்களால் இழைக்கப்பட்ட காலத்தில் எங்கிருந்தீர்?”

.4 L