பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59

கான், இந்து-முஸ்லீம் ஆகிய இரு சமுதாயத்தினருக் கும் ஊழியன் என்று எண்ணுகிறேன். நான் ஒரு வணிகன் (பனியா). கான் என்னுடைய வாணிபத்தைச் செய்து கொண்டிருக்கிறேன். பீகாரிலிருக்கும் இந்துக்களை நோக்கி, “பழைய பகையுணர்ச்சியை உள்ளத்தில் கொண்டு, மீண்டும் கலகத்தைத் துவக்கி முஸ்லீம்களைக் கொலை செய்ய முயன் ருல் நான் உயிரை விட்டுவிடுவதென முடிவு செய்திருக் கிறேன்’ என்று எச்சரிக்கை விடுகிறேன். அதே சமயத்தில் முஸ்லீம்களை கோக்கி, நீங்கள் நவகாளியில் மீண்டும் கலகத்தை ஆரம்பிக்க விரும்பில்ை முதலில் என்னேக் கொன்று விடுங்கள்’ என்று கூறியிருக்கிறேன். நவகாளி யில் அமைதியை கிலேநாட்டும் பணியில், சாகித் சாகிபும் குலாம்.சர்வாரும் எனக்குத் துணையாகவிருக்கிறார்கள்’ என்று காங்தியடிகள் அவ்விளைஞர்களுக்கு விளங்கக் கூறினர்.

அவ்விளைஞர்கள் அடிகளின் சொற்களே ஏற்றுக் கொள்ளவில்லே, “நாங்கள் இம்சையைப் பற்றியோ அஹிம் சையைப்பற்றியோ உங்களிடம் பாடம் கேட்பதற்காக வரவில்லை. நீங்கள் இவ்விடத்தை விட்டுச் சென்று விட வேண்டும். எந்த முஸ்லீயையும் பெலிய கட்டாவிற்குள் நுழைய விடமாட்டோம்” என்று கூறினர்.

“அப்படியானல் வகுப்புக் கலவரத்தைப் போக்கி அமைதியை உண்டாக்கும் பணியில் என்னேத் தலையிட வேண்டாம் என்று நீங்கள் கூறுகிறீர்களா? இப்பணியில் நீங்களும் எனக்கு ஒத்துழைப்பு கல்கினல், இந்துக்கள் இப்பொழுது நுழைய முடியாத பகுதிகளில், எவ்வித அச்சமும் இன்றி அமைதியோடு வாழத்தக்க மாற்றத்தை என்னல் செய்து காட்ட முடியும். சென்ற ஆண்டில் கடந்த நிகழ்ச்சிகளே மனதில் வைத்துக் கொண்டு. கிரந்தர எதிரிகளாக வாழ்வதில் யாது பயன்?” என்று அன் போடு கூறினர் காந்தியடிகள்.