பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73

மிகவும் இன்றியமையாத சமயங்களில் அஹிம்சையைக் கைவிட்டுவிடலாம் என்பது காந்தியடிகளின் கொள்கை. தம்முடைய ஆசிரமத்தில் திருடர் தொல்லை ஏற்பட்ட போது, தற்காப்புக்காகத் துப்பாக்கி வைத்துக்கொள்ள லாம் என்று கண்பர்களுக்குக் கூறியிருக்கிரு.ர்.

“வழிப்பறிக் கள்வருக்கு அஞ்சித் தனது அரிசிமூட்டை களே அவர்களுக்குக் கொடுப்பவன் கோழை. அவன் அஹிம் சையைக் கடைப்பிடிப்பவன் ஆகான். அவன் அஹிம்சை யைப்பற்றிய உணர்வில்லாதவன்; அதுபற்றி ஒன்றுங் தெரியாதவன். பெண் இழிவுபடுதலைப் பார்த்தும், மூர்க்கர் அடிக்கு அஞ்சி ஒடுபவன் ஆண்மையுடையவன் அல்லன்; அதற்குப் புறம்பானவன். அவன் கணவனுயிருக்கவோ, தங்தையாயிருக்கவோ, உடன் பிறந்தவகை இருக்கவோ தகுதியற்றவன்’ என்று கூறுகிறார். இவைபோன்ற சமயங் களில் பலாத்காரத்தை உபயோகப்படுத்தலாம் என்று அடிகள் கூறுகிரு.ர்.

 *

அஹிம்சையின் உருவமான காக்தியடிகள் பிறரைத் தம் கையால் அடித்தார் என்று சொன்னல் நீங்கள் கம்பு வீர்களா? ஆளுல் அத்தகைய நிகழ்ச்சி யொன்று அவர் வாழ்க்கையில் கடந்தது. காங்தியடிகள் 1947 ஆம் ஆண்டு காஷ்மீரத்திலிருந்து கல்கத்தாவிற்குப் புகை வண்டியில் பயணம் செய்துகொண்டிருந்தார். வண்டி பக்காடியார் பூர் நிலையத்தை அடைந்தது. அது பீஹார் மாகாணத்தி லுள்ள ஒரூர். புகைவண்டி கிலேயத்தில் பெருக்திரளாக மக்கள் கூடியிருக்தனர். காந்தியடிகளைத் தரிசிப்பதற்காக எல்லோரும் முட்டி மோதிக்கொண்டு ஓடி வந்தனர். “மகாத்மா வாழ்க!” என்ற வாழ்த்தொலி காது செவிடு படும்படி கேட்டது. கல்ல உடலுசம் பெற்ற ஒருவனலேயே அவ் விரைச்சலைத் தாங்கமுடியாதென் ருல் காந்தியடிகள்

ம. 5.