பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

எவ்வாறு பொறுப்பார்? அவர் தம் இருக்கையை விட்டு எழுந்தார். பலகணியின் அருகில் சென்றார். “என் ஒரு கிழவனுக்கு இத்தகைய தொல்லையைக் கொடுக்கிறீர்கள்?” என்று கத்தினர்.

காந்தியடிகளைப் பலகணியில் கண்ட மக்கள் மிக்க மகிழ்ச்சியடைந்தனர். காங்தியடிகளேத் தம் கையில்ை தொட்டுப் புனிதமடைய விரும்பிய சிலர் அவரை நோக்கி ஓடிவந்தனர். ஒவ்வொருவரும் தங்கள் காணிக்கையைக் காங்தியடிகளிடம் தாங்களாகவே கேரில்கொடுக்க முந்தினர். அதல்ை பெருங்குழப்ப மேற்பட்டது. அதனம் சினம் கொண்ட காந்தியடிகள் தம்மருகில் வங்த ஒருவனக் கன் னத்தில் அறைந்தார். காங்தியடிகளின் கைகளால் அடிபடு வதைப் பெரும் புண்ணியமாகக் கருதி, அவரிடம் அடிபடு வதற்காகக் கன்னத்தைக் காட்டிய வண்ணம் ஒவ்வொரு வரும் போட்டியிட்டு ஓடிவங்தனர். உடனே அருகிலிருந்த மனுகாங்தியும், அப்பாபெகனும் காங்தியடிகளைப் பல கணியைவிட்டு நீங்கி உள்ளே செல்லுமாறு வேண்டிக் கொண்டனர். அடிகளும் தம் இருக்கையில் சென்றமர்க் தார்.

இந்தச் செயல் ஹிம்சையின் பாற்பட்டதா, அஹிம்சை யின்பாற்பட்டதா என்று காம் ஆராய வேண்டிய அவசிய மில்லை. ஏனென் ருல் அடிபட்ட அத்தொண்டர்களே அதை ஹிம்சை என்று கருதவில்லே. கருதியிருக்தால், கன்னத் தைக் காட்டிய வண்ணம் காந்தியடிகளின் கையால் அடி படுவதற்கு போட்டி போட்டுக்கொண்டு ஓடிவருவார்களா?

3. அஞ்சாமை

அஹறிம்சை கோழையின் ஆயுதம்’ என்பது சிலர் கொள்கை. ஆனல் அஞ்சாமைக்கும் அவிம்சைக்கும்