பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

மேற்கூறிய விளக்கங்களே வைத்துக்கொண்டு காந்தி யடிகளின் வாழ்க்கையை ஆராய்வோம். அப்போது அஞ்சா மைக்கும் அஹிம்சைக்கும் உள்ள உயிர்த் தொடர்பு தெற் றென விளங்கும்.

தாதா அப்துல்லா கம்பெனியாரின் வழக்குச் சம்பந்த மாகக் காங்தியடிகள் முதன் முதல் தென் ஆப்பிரிக்கா சென்றார். டாரிஸ்டர் காங்தி டர்பன் சென்றடைந்த மூன்றாம் நாள், தாதா அப்துல்லா அவரை வழக்கு மன்றத் துக்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்த பல வழக்கறிஞர் களுக்கும் இவரை அறிமுகம் செய்து வைத்து அவர்களுடன் உட்கார வைத்தார். இதுவரையில் காங்தியடிகளுக்கு உற்சாகமாகவே இருந்தது.

நீதிபதி உள்ளே வந்து தம் இருக்கையில் அமர்த்தார். புதிதாக வங்து அமர்ந்திருந்த காங்தியடிகளே ஏற இறங்கப் பார்த்தார். தாம் வழக்குமன்றத்துக்குப் புதியவராகையால் நீதிபதி அவ்வாறு பார்க்கிறார் என்று காந்தியடிகள் முதலில் எண்ணினர். பிறகு தொடர்ந்து ஏதோ விசித்திரப் பொருளைப் பார்ப்பதைப் போல் தம்மையே நீதிபதி பார்ப் பதை உணர்ந்த அடிகளுக்கு என்னவோபோல் இருந்தது. நீதிபதி காங்தியடிகளை கோக்கி, “உமது தலைப்பாகையை அகற்றி விடும்’ என்று ஆணையிட்டார். இக்கட்டளையைக் கேட்டவுடன் காக்தியடிகள் திகைத்துப் போனார். பலபேர் முன்னிலையில் நீதிபதி தம்மை அவமானப்படுத்தி விட்டதாக எண்ணினர். வழக்கு மன்றத்திலிருந்த எல்லோரும் காந்தி யாரை கோக்கிக் கொண்டிருந்தனர். மிகவும் இக்கட்டான கிலேயில் தாம் இருப்பதை உணர்ந்தார். எனினும் நீதிபதி யின் ஆனேக்குக் கீழ்ப்படியாமல் அங்கு அமர்த்திருப்பதும் குழப்பத்துக்கு இடமாகும். எனவே தம் இருக்கையை விட்டு எழுந்து வெளியில் சென்று விட்டார்.

“இந்தியர்கள் வழக்குமன்றத்துக்குள் தலைப்பாகை அணியக் கூடாதா? அப்படி யென்றால் தாதா அப்துல்லா