பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 :

சென்றனர். எப்படியோ தென் ஆப்பிரிக்காவில் இந்தியரின் தொகை மிகுந்தது. இந்தியர்கள் நல்ல முறையில் வாழ் வதைக் காணப் பொறுக்காத வெள்ளேயர், அவர்களுக்குப் பல வகையில் தொல்லே கொடுக்கத் தொடங்கினர். தென் னப்பிரிக்க அரசாங்கமும் இந்தியர் நலனுக்கு எதிரான பல சட்டங்களே இயற்றியது. அச்சட்டங்களில் கொடியது தலைவரி. அதன்படி ஒப்பங்தக் கூலியாக வந்த ஒவ்வொரு இந்தியனும், ஒப்பந்தக் காலம் தீர்ந்தவுடன் ஆண்டுக்கு 25 பவுன் கொடுக்க வேண்டும். எவ்வளவுதான் முயற்சி யோடு உழைத்தாலும், ஆண்டுக்கு 13 பவுனுக்கு மேல் சம்பாதிக்க எங்த இந்தியக் கூலியாலும் முடியாது. அப்படி யிருக்கும் போது அவன் எவ்வாறு 35 பவுன் கொடுக்க முடியும்? ஒன்று அவன் தென்னுப்பிரிக்காவை விட்டு வெளி யேற வேண்டும்; அல்லது மீண்டும் ஒப்பந்தக் கூலியாக வேண்டும்; வேறு வழியில்லே.

திருவளார் இலயனஸ் கர்டிஸ்’ என்ற ஒர் ஆங்கிலப் ‘பெருங்தகையாளர் தென்னுப்பிரிக்காவுக்கு வந்தார். அவர் போகிற போக்கில் ஒரு வெடிகுண்டை வீசி எறிந்து விட்டுச் சென்றார். தென்னுப்பிரிக்காவில் இந்தியர்கள் கை ஓங்கு வதற்கு இடங் கொடுத்தால், ஐரோப்பியர் வாழ்வுக்கே ஆபத்து வந்து விடும் என்று சொன்னர், அந்த நுண்ணறி வாளர். உடனே திரான்ஸ்வால் அரசாங்கத்தார் ஆசியச் சட்டத்திருத்த மசோதா ஒன்றைத் தயாரித்தனர்.

இங்த மசோதாவின்படி திரான்ஸ்வாலில் அப்போது வசித்த ஒவ்வொரு இங்தியரும் புதிதாக அநுமதிச் சீட்டுப் பெற வேண்டும். அதற்காக விண்ணப்பம் போட வேண்டும். விண்ணப்பத்தில் பெயர், சாதி, வயது, இருப்பிடம் ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும். அவற் ருேடு விண்ணப்பத்தை அங்கீகரிக்கும் அதிகாரி, ஒவ்வொரு வருடைய அங்க அடையாளங்களேயும் குறித்துக் கொள் வார். இவை மட்டுமல்லாமல் ஒவ்வொரு இந்தியரும் தம்