பக்கம்:கானகத்தின் குரல்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 கோரைப்பல், குறுந்தடி ஆட்சி ைெ டயே கடற்கரையிலே முதல்நாள் பக்குக்கு வெகு பயங்கரமாகக் கழிந்தது. ஒவ்வொரு மணியிலும் புதிய அதிர்ச்சிகள். நாகரிகத்தின் மத்தியிலிருந்து, அநாகரிக ஆதிநிலையின் மத்தியிலே திடீரென்று பக் தூக்கி எறியப்பட்டுள்ளது. வேலை ஒன்றுமில்லாத கதிரவன் ஒளியிலே சோம்பித் திரியும் வாழ்க்கை இங்கேயில்லை. இங்கே அமைதியோ, ஒய்வோ, பாதுகாப்போ கிடையாது. எல்லாம் குழப்பம்; எப்போதும் வேலை; ஒவ்வொரு கணமும் உயிருக்கும் உடலுக்கும் ஆபத்து. இங்கே எப்பொழுதும் உஷாராக இருக்கவேண்டும். ஏனென்றால், இங்கே உள்ள நாய்கள், நகரத்து நாய்கள் போல அல்ல. இங்குள்ள மனிதர்களும் நகரத்து மனிதர்கள் போலிருக்கவில்லை. நாய்கள் கொடியவை; மனிதர்களும் கொடியவர்களே. இங்கு கோரைப்பல்லும் குறுந்தடியும் ஆட்சி புரிந்தன. இவ்விடத்திலிருந்து ஓநாய் போன்ற நாய்கள் ஒன்றோடொன்று போட்டுக்கொண்டிருந்த சண்டையைப் போலச் சண்டையைப் பக் பார்த்ததே இல்லை. முதல் அனுபவமே என்றும் மறக்க முடியாத படிப்பினையை அதற்குக் கொடுத்தது. அது சொந்த அனுபவமன்று. சொந்த அனுபவமாக இருந்தால் அது உயிரோடிருக்க முடியாது. கர்லிக்கு ஏற்பட்ட அனுபவம் அது. மரக்கட்டைகளை அடுக்கியிருந்த ஒரு கடைக்குப் பக்கத்திலே முகாம் போடப்பட்டிருந்தது. இயல்பான

  • டையே என்பது ஸ்நாக்வேக்கு வடமேற்கில் உள்ளது. அங்கிருந்துதான் உறைபனிப் பாதையில் டாலனுக்குப் புறப்படுவார்கள். டாஸனுக்கு வேண்டிய பொருள்களும் அங்கிருந்தே செல்லும்