பக்கம்:கானகத்தின் குரல்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 கனகத்தின் குரல் பெரோல்ட்டும் வந்து சேர்ந்தான். சுமார் ஒரு மணி நேரம் வரையில் அவனும் பிரான்சுவாவும் பக்கைத் துரத்தினார்கள், தடிகள் அதன் மேல் வீசினார்கள். பக் தந்திரமாகத் தப்பிக் கொண்டது. அவர்கள் அதன் மீது வசைமாரி பெய்தார்கள். அதன் பெற்றோர்களும், மூதாதையரும், அதற்கு இனிமேல் பிறக்கப்போகும் குட்டிகளும் கூட அவர்களுடைய சாபத்திற்குத் தப்பவில்லை. பக் அந்தச் சாபத்திற்குப் பதிலாகச் சீறிக்கொண்டு அவர்கள் கைக்கு அகப்படாமல் எட்டி நின்றது. அந்த இடத்தைவிட்டு ஒடிப்போக அது முயலவில்லை; ஆனால் முகாம் போட்ட இடத்தைச் சுற்றிச் சுற்றி வந்தது. இதன் மூலம் அது தன் விருப்பம் நிறைவேறினால் பழையபடி ஒழுங்காக வண்டியிழுக்க ஆயத்தமாக இருப்பதாக விளம்பரம் செய்தது. பிரான்சுவா கீழே உட்கார்ந்து தலையைச் சொறியலானான். பெரோல்ட் கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டு சீறினான். காலம் வீணாகப் பறந்துகொண்டிருந்தது. ஒரு மணி நேரத்திற்கு முன்பே அவர்கள் புறப்பட்டிருக்க வேண்டும். பிரான்சுவா மறுபடியும் தலையைச் சொறிந்தான். அவன் தலையை ஆட்டிக்கொண்டு பெரோல்டைப் பார்த்துப் பல்லை இளித்தான். தோல்விச் சின்னமாகப் பெரோல்ட்டும் தோள்களைக் குலுக்கினான். முதலிடத்திலிருந்த சோலெக்ஸுக்குப் பக்கத்தில் போய் நின்றுகொண்டு பிரான்சுவா பக்கை அழைத்தான். பக் நாய்ச்சிரிப்பு சிரித்தது. ஆனால் அருகில் வரவில்லை. சோலெக்ஸை அவிழ்த்து அதற்குரிய பழைய இடத்தில் பிரான்சுவா பூட்டினான். பக்கைத் தவிர மற்ற நாய்களெல்லாம் ஒழுங்காக வண்டியில் பூட்டப்பட்டுப் புறப்படத் தயாராக இருந்தன. முதலிடத்தைத் தவிர பக்குக்கு இப்பொழுது வேறு இடம் கிடையாது. மறுமுறையும் பிரான்சுவா பக்கை அழைத்தான். மறுமுறையும் பக் சிரித்துக்கொண்டு எட்டியே நின்றது. தடியைக் கீழே போட்டுவிடு' என்று பெரோல்ட் ஆணையிட்டான். பிரான்சுவா தடியை எறிந்தான். உடனே வெற்றிச்சிரிப்பு சிரித்துக்கொண்டே பக் ஓடி வந்து முதலிடத்தில் நின்றுவிட்டது. அள்ளைவார்களைப் பூட்டினார்கள். வண்டி புறப்பட்டு ஆற்றுப்பாதை வழியாக ஒடலாயிற்று. பக் மிக நல்ல நாய் என்று பிரான்சுவா மதித்திருந்தான். ஆனால் அவன் அதற்குக் கொடுத்திருந்த மதிப்பே குறைவு என்று கருதும்படியாக அது நன்கு நடந்துகொண்டது. தலைமை ஸ்தானத்திற்குரிய கடமைகளையெல்லாம் அது ஒரேயடியாக