பக்கம்:கானகத்தின் குரல்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜாக் லண்டன் 83 மேற்கொண்டுவிட்டது. விரைவிலே சிந்தித்து முடிவுக்கு வருவதிலும், விரைவிலே காரியம் செய்வதிலும் சரியான தீர்மானம் செய்வதிலும் ஸ்பிட்ஸைவிட அது மேம்பட்டு நின்றது. ஒழுங்குமுறைகளை உண்டாக்குவதிலும், அவற்றைத் தவறாமல் பின்பற்றி மற்ற நாய்கள் நடக்குமாறு செய்வதிலும் பக் தன் திறமை காட்டிற்று. தலைமைப்பதவியில் ஏற்பட்ட மாறுதலை டேவும் சோலெக்ஸாம் பொருட்படுத்தவில்லை. அந்தக் கவலை அவைகளுக்கு இல்லை. வண்டியிழுப்பதில் உற்சாகமாக இருப்பதுதான் அவைகளின் வேலை. அதிலே இடையூறு ஏற்படாமலிருக்கும் வரையில் அவைகள் மற்ற நிகழ்ச்சிகளைப் பற்றிக் கவலைகொள்ளவில்லை. ஸ்பிட்ஸின் இறுதிநாட்களில் மற்ற நாய்கள் கட்டுப்பாட்டை மீறிக்கொண்டிருந்தன; அவற்றையெல்லாம் சரியானபடி பக் தண்டித்து ஒழுங்குக்குக் கொண்டுவருவதைக் கண்டு டேவும் சோலெக்ஸும் மிகவும் ஆச்சரியப்பட்டன. பக்குக்குப் பின்னால் பைக் பூட்டப்பட்டிருந்தது.அது தன் பலம் முழுவதையும் உபயோகித்து இழுக்காது; மேல் போக்காகவே வேலை செய்யும். இதற்கு இப்பொழுது நல்ல தண்டனை கிடைத்தது. அதனால் முதல் நாள் முடிவதற்குள் அது தோள் கொடுத்து நன்றாக இழுக்கலாயிற்று. ஜோவைத் தண்டிக்க ஸ்பிட்ஸால் முடியவே இல்லை. ஆனால் முதல்நாள் இரவு முகாமிட்டபோதே பக் அதைச் சரியானபடி தண்டித்துவிட்டது. பக்தன் முழுப்பலத்தையும் கொண்டு தாக்கவே ஜோ பணிந்து சிணுங்கத் தொடங்கிவிட்டது. நாய்களுக்குள்ளே இப்பொழுது ஒழுங்கும் கட்டுப்பாடும் ஏற்பட்டுவிட்டன. எல்லா நாய்களும் சேர்ந்து பழையபடி ஒருமனத்தோடு வேலை செய்தன. வழியிலேயே ஓரிடத்தில் டீக், கூனா என்ற பெயருடைய இரண்டு எஸ்கிமோ நாய்களையும் புதிதாக வாங்கி சேர்த்தார்கள். அந்த நாய்களைப் பக் வெகு சீக்கிரத்தில் பழக்கியதைக் கண்டு பிரான்சுவா ஸ்தம்பித்துப் போனான். 'பக்கைப்போல் நாயே கிடையாது; கிடையவே கிடையாது. அதற்கு ஆயிரம் டாலர் கொடுக்கலாம். பெரோல்ட், நீ என்ன சொல்லுகிறாய்?" என்று அவன் உற்சாகமாகக் கூவினான். அவன் கருத்தைப் பெரோல்ட் ஆமோதித்தான். எதிர்பார்த்ததை விடப் பிரயாணம் வேகமாக நடந்தது. ஒவ்வொரு நாளும் வேகம் அதிகப்பட்டது. பாதையும் நன்றாக இறுகி இருந்தது. புதிதாகப் பணி விழாததால் ஒரு தொந்தரவும் இல்லை. குளிரும் மிகக் கடுமையாக இருக்கவில்லை. வெப்பநிலை பூஜ்யத்திற்குக் கீழே ஐம்பது டிகிரியில்