பக்கம்:கானகத்தின் குரல்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(6 மனிதப்பற்று சென்ற டிசம்பரிலே குளிரின் கொடுமையால் ஜான் தார்ன்டனுடைய கால்கள் உறைந்துபோய் நோயுற்றன. வெள்ளாற்றின் மேற்பகுதிக்குப் புறப்பட்ட அவனுடைய கூட்டாளிகள் அவனை அங்கேயே விட்டுச்சென்றார்கள். ஒய்வு பெற்று அவன் குணமடைய வேண்டுமென்பது அவர்களுடைய எண்ணம். வெள்ளாற்றின் மேற்பகுதியிலிருந்து அறுப்புமரங்களை ஒடத்தில் ஏற்றிக்கொண்டு அங்கே வந்து பிறகு அம்மரங்களை விற்க டாஸனுக்கு ஒரிடத்திலேயே செல்வார்கள். பக்கைக் காப்பாற்ற வந்த சமயத்திலும் தார்ன்டன் கொஞ்சம் நொண்டிக் கொண்டு தானிருந்தான். ஆனால் குளிர் நீங்கி வெப்பம் சற்று அதிகரிக்கவே அவன் முற்றிலும் குணமடைந்தான். வசந்தகாலத்தின் நீண்ட பகற்பொழுதிலே ஆற்றின் கரையில் படுத்துக்கொண்டு ஒடும் தண்ணீரின் வனப்பையும், பறவைகளின் கீதத்தையும்,இயற்கையின் இனிமையையும் பக்பருகிக்கொண்டிருந்தது. அதனால் அது மீண்டும் தன் பழைய வலிமையைப்பெற்றது. மூவாயிரம் மைல்கள் பிரயாணம் செய்தபிறகு கிடைக்கும் ஒய்வின் சுகமே சுகம். வேலையொன்றுமின்றி பக் சுற்றித்திரிந்தது. அதன் காயங்கள் ஆறின; அதன் தசைநார்கள் புடைத்தெழுந்தன; உடம்பிலே எலும்பை மறைத்துச் சதைப்பற்று மிகுந்தது. தார்ன்டனோடு பக்கும், ஸ்கீட்டும், நிகும் உல்லாசமாக உலாவின. அறுப்புமரங்களோடு ஒடம் அங்கு வந்து சேர்ந்ததும் டாஸனுக்குப் புறப்படத்தார்ன்டன் தயாராய் இருந்தான். ஸ்கீட்என்பது அயர்லாந்து நாட்டுச் சிறிய நாய்.அது பக்கினிடம் அன்போடு பழக முன்வந்தது. சாகப்போவதுபோலக் கிடந்த பக் அதை எதிர்த்துப் பயமுறுத்தவில்லை. நோயால் துன்புறுகின்ற நாய்களுக்கு உதவி செய்யும் தன்மை ஒரு சில நாய்களுக்கு உண்டு. பூனை தனது