பக்கம்:கானகத்தின் குரல்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 கானகத்தின் குரல் குட்டிகளை நாவினால் நச்கிச் சுத்தப்படுத்துவது போல, பெண் நாயான ஸ்கிட் பக்கின் காயங்களை நாவினால் நக்கிச் சுத்தப்படுத்தியது. ஒவ்வொரு நாளும் பக் தனது காலைஉணவை முடிக்கும் சமயத்தில் ஸ்கீட் அதனிடம் வந்து இந்தப் பணியைச் செய்யும். தார்ன்டனுடைய உதவியை எதிர்பார்ப்பது போலவே சில நாட்களில் ஸ்கீட்டின் உதவியையும் பக் எதிர்பார்க்கலாயிற்று. நிக் வேட்டைநாய் இனத்தைச் சேர்ந்தது. அது கருமை நிறம் வாய்ந்தது. அதன் கண்களைப் பார்த்தாலே அது மிக நல்ல சுபாவமுடைய நாய் என்று தெரியும். அதுவும் பக்கினிடம் அன்போடிருந்தது. அந்த நாய்கள் இரண்டும் தன்னிடம் பொறாமை கொள்ளாததைக் கண்டு பக் ஆச்சரியம் அடைந்தது. ஜான் தார்ன்டனைப்போலவே அவைகளும் பரந்த மனப்பான்மையும் அன்பும் உடையனவாகத் தோன்றின. பக்கின் உடம்பிலே பலம் ஏற ஏற அந்த நாய்கள் அதனுடன் பல வகையாக விளையாடின. தார்ன்டனும் அந்த விளையாட்டில் சேர்ந்து கொள்ளுவான். இவ்வாறாக பிணியெல்லாம் தீர்ந்து பக் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்கலாயிற்று. முதல்முறையாக இப்பொழுதுதான் அதன் உள்ளத்திலே ஆழ்ந்த அன்பு தோன்றியது. கதிரவன் ஒளி கொஞ்சும் சான்டாகிளாராவில் நீதிபதி மில்லரின் மாளிகையில் இருந்தபொழுதும் அதற்கு இத்தகைய அன்பு பிறக்கவில்லை. நீதிபதியின் புத்திரர்களோடு உலாவித் திரிந்தபோதும், வேட்டைக்குச் சென்றபோதும் கூட்டாளிகளோடு சேர்ந்து வேலை செய்வது போன்றே அது நடந்துகொண்டது. நீதிபதியின் பெயர்களுக்கு அது காப்பாளன் போலிருந்தது. நீதிபதியினுடனும் அது ஒரு வகையான பெருமித நட்பே கொண்டிருந்தது. காய்ச்சலாய்க் காயும்காதல் அவர்களிடம் அதற்கு உண்டாகவில்லை. பக்திப்பித்து என்று கூறும்படியான அவ்வளவு ஆழ்ந்த அன்பை எழுப்ப ஜான் தார்ன்டன் வேண்டியிருந்தது. அவன் அதன் உயிரைக் காப்பாற்றினான். அதுவே ஒரு விஷயம். மேலும் அவன் எஜமானனாக இருக்க எல்லா வகைகளிலும் தகுதி பெற்றிருந்தான். தங்கள் சொந்தக்காரியத்தின் பொருட்டும், ஒரு கடமையாய்க் கருதியும் மற்றவர்கள் தாங்கள் வைத்திருக்கும் நாய்களின் நலத்தைக் கவனித்தார்கள். ஆனால் தார்ன்டன் தனது குழந்தைகளைக் கவனிப்பதுபோல, நாய்களைக் கவனித்தான். அவன் நாய்களோடு உற்சாகமாகவும், அன்பாகவும் வம்பு பேசுவதில் தவறவே மாட்டான்; அப்படிப் பேசுவதில் மிகுந்த மகிழ்ச்சியும் அடைந்தான். அவன் தனது கைகளுக்கிடையே பக்கின் தலையை நன்கு அழுத்திப்பிடித்துக்கொண்டு அதன் மேல் தன் தலையை