பக்கம்:கானகத்தின் குரல்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜாக் லண்டன் 95 நிகும் மிக நல்ல சுபாவம் உடையவையாகையால், அவை சண்டையிடா. மேலும் அவையும் ஜான் தார்ன்டனுடைய நாய்களே. ஆனால் மிகுந்த தைரியமும், மிக நல்ல இனத்தைச் சேர்ந்ததுமான நாய் எதிர்ப்பட்டாலும் அது விரைவில் பக்குக்குப் பணிந்துவிடும். அப்படியில்லாவிட்டால், அதன் உயிருக்கே ஆபத்துதான். பக் சிறிதும் இரக்கம் காட்டாது. கோரைப்பல் குறுந்தடி ஆட்சியை அது நன்கு கற்றுக்கொண்டிருந்தது. சாகடிக்க முனைந்தபின் ஒரு விரோதியை அது விடவேவிடாது. ஸ்பிட்ஸ், போலீஸ் நாய்கள், தபால்நாய்கள் ஆகியவற்றிடமிருந்து அது நிறையக் கற்றுக்கொண்டிருந்தது. அரைகுறையாக எதையும் விட்டுவிடக் கூடாதென்று அது தெரிந்து கொண்டிருந்தது. தான் வெல்ல வேண்டும் அல்லது தோற்க வேண்டும். இரக்கம் காட்டுவது பலவீனம். கொடுமையான காட்டு வாழ்க்கையிலே இரக்கம் என்பது இல்லவேயில்லை. இரக்கம் தோன்றினால் அது அச்சத்தின் அறிகுறியாகக் கொள்ளப்படும். அது சாவிலே கொண்டு வந்து சேர்க்கும். கொல்லல் அல்லது கொல்லப்படுதல்; தின்னல் அல்லது தீனியாதல் - இதுவே விதி. அனாதிகாலமாய் ஆணை செலுத்தும் இந்த விதியை அது பின்பற்றியது. இந்த உடலைவிட அதன் பூர்வீக அனுபவம் நீண்டதாக இருந்தது. அந்த நீண்டஇறந்தகாலத்தைப் பக் நிகழ்காலத்துடன் பிணைத்தது. கடலில் ஏற்றவற்றங்களும், பருவக்காலங்களும் மாறி மாறி வருவதுபோல பக்கின் மூலமாக அந்த அனாதிகாலம் துடித்துத் தாளமிட்டுக் கொந்தளித்தது. அகன்ற மார்பு, செறிந்த உரோமம், வெண்மையான கோரைப்பல்-இவற்றுடன் அது தார்ன்டன் வளர்த்த தீக்கருகில் படுத்திருந்தது. ஆனால், அதற்குப் பின்னணியில் எத்தனையோ வகையான நாய்களின் நிழல்கள் நின்றன. அவற்றுள் இடைவெட்டுக்களும், கொடிய ஒநாய்களும் இருந்தன. அவற்றின் உணர்ச்சிகள் பக்கின் உள்ளத்தை உந்தின. அது உண்ணும் உணவை அவை சுவைத்தன; அது குடிக்கும் தண்ணீரை அவை விழைந்தன; அதனுடன் சேர்ந்த காற்றை மோப்பம் பிடித்தன; காட்டிலுள்ள கொடிய விலங்குகள் உண்டாக்கும் ஒசைகளை அதற்கு அறிவுறுத்தின; அதன் மனத்தைச் செலுத்தின; செயல்களை நடத்தின; அது படுக்கும்போது அதனுடன்ே படுத்து உறங்கின; அதனுடன் சேர்ந்து கனவு கண்டன; அதன் கனவின் கதையாய் மாறின. இந்த நிழல்கள் ஆதிக்கத்தோடு அதை அழைத்தமையால் நாளாக நாளாக மனிதஇனமும், அதற்குச் செய்ய வேண்டிய கடமைகளும் பக்கைவிட்டு மறையலாயின. கானகத்தின் மத்தியிலிருந்து அதை ஒரு குரல் அழைத்தது. மர்மமாய் ஒலித்து, தன் உள்ளத்தை ஈர்த்த