பக்கம்:கான்சாகிபு சண்டை.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113

சொல்லக் சொல்ல இறுக்கிக் கட்டினதைப் பார்த்து

துரைகா கோபமாய் ஏது சொல்ல லுற்றான் கட்டாதே துரோகிப் பயலே சீசீ எனது

கனத் துடம்பு நோவுதே அல்லாவே நபியே என்னுடைய உப்பைத் தின்று போட்டு நீங்கள்

எனக்கே ரண்டகம் நினைப்பீரே யானால் எங்கெங்கே போனாலும் பாவி உங்களுக்குக் கிரணங் கொடுப்பாரோ சிக்கந்தர் சாயபு - சொல்லச் சொல்ல இறுக்கி யிறுக்கிக் கட்டித்

துரைகானை யறைவீட்டிற் போட்டே யடைத்து பாராவும் பத்திரமாய் வைத்து சீனி

பார்ப்பானுந் தயார்ா யிருக்கும் வேளையிலே மாசாவு மிதுசேதி கேட்டு கானு

மகாராச னரண்மனைக்கு வந்து நின்று பார்த்து என்னடா சீனிச் சிராவே - இந்த

கூக்குர லேதென்று கேட்ட மாத்திரத்தில் ஒன்றுக்கும் பிடிக்க வில்லை தாயே அவரைச்

சம்பளப் பணத்துக்குப் பிடித்து வைத்தேன் சம்பளப் பனங் கையில் கொடுத்தால் நமது

சாயபு துரை கானனை விடுகிறே னென்றான்

கான்சாகிபை நவாபிடம் ஒப்படைத்தல்

நல்ல தென்று மாசா நடந்து அந்த

நாழிகையி லரண்மனை போய்ச் சேர்ந்த மாத்திரத்தில் புறப்பட்டு சீனிசிராவ் வெளியில் வந்து

கானனிட பட்டாளம் நிற்பதைக் கண்டு மாற்றியே மறுபாரா வைத்து - உடனே மன்னவனைப் பிடித்தே னென்று காயித மெழுதி அனுப்பினான் பிள்ளைமார்க் கப்போ அதை

அன்பான பிள்ளைமா ரிவரும் வாங்கி பிரித்தவர்கள் வாசித்துப் பார்த்து பாதர்

புண்ணிய நவாபுக்குச் சங்கதியைச் சொல்லி கானனைப் பிடித்தது பொய்யென்று சொல்லி

காலாள்களை விட்டுப் பார்த்துவரச் சொல்லி கோட்டைக்குள் நுழைந்து பார்க்கும் போது அங்கே

குறிப்பாக ஏனென்று கேழ்ப்பாரு மில்லை கான் சாயபை பிடித்தது மெய்யென்று வந்து

காலாள்களும் நவாபுமுன் வந்து சொன்னார் தாம்ோதரம் பிள்ளை தனை யழைத்து தனது

பட்டாளத்தைக் கட்டி யனுப்பின மாத்திரத்தில் 5T-8 - -