பக்கம்:கான்சாகிபு சண்டை.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

115

நானுனக்கு அகப்பட்டாப் போலே இப்போ

நபாபுதுரை மகனேநீ அகப்பட்டையே யானால் தேங்காயும் உன்சதையு மறுத்துத் தின்னச்

சொல்லி யடிப்பேண்டா கருவாட்டு லப்பே அப்போது மம்முதலி சிரித்து நல்ல

ஆண்பிள்ளை கானனென்று மனதில் நினைத்து ஏழரை வருஷங்க ளாச்சே கானு

இதமாகவே நல்ல மதுரை வந்து சேர்ந்து தேடிய திரவியங்க ளெல்லாம் இப்போ எங்கே யென்று கேட்டானே மம்முதலி துரையும் என்னுடைய பணத் தின்ன சாயபு இப்போ

என்னுடைய பிள்ளைக ளில்லையோ நவாடே என்னிடத்தில் சொல்லுகிற தென்ன என்று

ஒழுங்காகக் கேட்டானே கான்சாயபு துரையும் மூன்று நாளன்னம் புசியாமல் بالا لا يمي

முனை வீரன் கான்சாயபு பேசுகிறா னென்று சாதமுங் கொண்டுவரச் சொல்லி நல்ல

தாம்பாளங் கொண்டுவந்து வைத்து சொம்பில் சலங் கொண்டுவந்து வைத்து அப்போ

சீரான பதார்த்த வகை கொண்டுவரச் சொல்லி வெள்ளைத் தாம்பாளத்தில் போட்டு அப்போ

விதமான கான்சாய்பு முன்னெடுத்து வைத்தார் அப்போது கான்சாயபு நீலன் பாதர்

அன்னம் வைத்த தட்டைக் கண்ணாலே பார்த்து இடது காலாலே யுதைத் திட்டான் சாதம்

இதமான மல்லிகைப்பூ போலே சிதற தீவாசு மேல் சாதம் சிதற அப்போ

சிங்கம் நவாபு துரை யேறிட்டுப் பார்த்து ஆலோசித்து துரை மாரைப் பார்த்து இவனுக்கு

ஆக்கினை யென்ன வென்று கேட்டார் நவாபு அப்போது துரைமார்க ளெல்லாம் கூடி

ஆலோசனை செய்து சாஸ்திரத்தைப் பார்த்து சாஸ்திர முறையின் படியே அப்போ

சாயபுதுரை நவாபுக் கேது சொல்லலுற்றார் ஆக்கினை யொன்று மில்லை துரையே இவனைச் சும்மாவிடச் சொல்லி யிருக்குதென்று சொன்னார் அப்போது மம்முதலி சாய்பு மனதில்

ஆயாச மாகியே கோபித்துக் கொண்டு துக்காம லிவனை நீங்கள் விட்டால் என்னைத்

தூக்குங்க ளென்று சொல்லி எழுந்திருந்து போனார்