பக்கம்:கான்சாகிபு சண்டை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

IX

வந்து அங்கு கோட்டையை மறுபடியும் கட்டி அங்கிருந்து முன்பு ஒன்றுகூடியிருந்த பாளையக்காரர்களை யெல்லாம் பணியச் செய்தான். தனது நண்பர்கள் பணிந்துவிட்டதைக் கண்ட பூலுத்தேவனும் கான்சாகிபுவிடம் பணிந்துவிட்டான்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு நிலைப்படையை வைத்துவிட்டு கான்சாகிபு திருநெல்வேலிக்கு ஒரு படையோடு சென்றான். அங்கு வரிவசூல் குத்தகையை 11லட்சம் ரூபாய்க்குத் தளவாய் முதலியார் என்பவருக்கு நவாபு கொடுத்துவிட்டதை அறிந்தான். இதனை ஒப்புக் கொள்ளாமல் மாபூஸ்கான் தானே குத்தகைதாரன் என்று கூறிக்கொண்டு வரிவசூல் செய்து வந்தான். இரு குத்தகைதாரர்களிடையே சச்சரவுகள் மூண்டன. முதலியார் கான்சாகிபுவின் உதவியை வேண்டினார். கான்சாகிபு முதலியாரையும் மாபூஸ்கானையும் சமாதானம் செய்து வைத்தான். இதன் பிறகு நாவபு படைகளின் செலவுக்காக முதலியாரிடம் பணம் கேட்டான். முதலியார் கொடுக்க மறுத்தார். கான்சாகிபு அவரைப் பாளையங்கோட்டைச் சிறையில் அடைத்தான். மேற்குப் பகுதிப் பாளையக்காரர்கள் முதலியோருக்காக வேண்டி படையெடுத்து வந்து அவரை விடுவித்தார்கள். யூசுப்கான் பாளையங்கோட்டைக்கு வந்து அவர்களுடைய படையைத் தோற்கடித்தான்.

இத்தோல்வியால் பூலுத்தேவனும், அவனது நண்பர்களும் தமது எதிர்ப்பைக் கைவிட்டுவிடவில்லை. திண்டுக்கல்லில் தங்கியிருந்த பிரிட்டிஷாரின் பகைவனான ஹைதர்அலியோடு தொடர்புகொண்டு கான்சாகிபை எதிர்க்க உதவி கோரினார்கள். மாபூஸ்கானின் நண்பனான ஆலம்கான் வசம் மதுரை இருந்தது. ஆங்கிலேயரின் நிலைமை இரண்டுங் கெட்டானாயிருந்தது. மதுரையைக் கைப்பற்றும் அவசியத்தை உணர்ந்து, கம்பெனியார் கான்சாகிபை மதுரைக்குப் படையோடு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் மாபூஸ்கான் தானே ஆற்காட்டு நவாபாக வேண்டும் என்ற ஆசையால் கான்சாகிபுக்கு எதிராகப் பூலுத்தேவனுடைய அணியில் சேர்ந்துவிட்டான். போரில் கான்சாகிபுக்கு எதிராக மாபூஸ்கான் படைகளும் சேர்ந்துகொண்டன. நவாபின் வரிவசூல் குத்தகைதார் தான் தான் என்று மாபூஸ்கான் முடிவு செய்து கொண்டான். பூலுத்தேவன், களக்காட்டைத் திருவாங்கூர் மன்னனுக்குக் கொடுத்துவிட்டு அவருடைய உதவியைப் பூலுத்தேவன் கூட்டணியினர் பெற்றுக்கொண்டனர்.

யூசுப்கான் திருநெல்வேலிக்கு வந்தபொழுது பல சக்திகள் தனக்கெதிராகச் செயல்படுவதை உணர்ந்தான். இச்சக்திகளைக் குலைத்துச் சிலவற்றைத் தனக்கு ஆதரவாகத் திருப்பிக்கொள்ளத் திட்டமிட்டான். திருவாங்கூர் மன்னனுடைய கோரிக்கையை ஒப்புக்கொண்டு களக்காட்டை அவனுக்கே