பக்கம்:கான்சாகிபு சண்டை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாட்டுக் கதைப்பாடல்
விருத்தம்
காப்பு


சீர்வளரும் மதுரை தன்னிற் சிறக்கவே செங்கோ லோச்சிப்
பார்வள ரமுதம் போன்ற பாக்ஷா நபாபு மெச்சும்
கார்வனர் பிரபு டீகக் கான்சாயபு கதையைப் பாடத்
தார்வளர் கூடல் மேவுந் தந்தி பொற்பதங் காப்பாமே.

தாம் தனதந்த நானா தன
தாம் எனம் தனாதந்த நாதந்த நானா

மகுடமுடி டால் விருதிலங்க ஜன்னல்
        மதயானை வளர்த் தெடுத்த வரிவேங்கைக் குட்டி
விகட மிடுவோர்கள் குல காலன் வெற்றி
        விசையாலீம் குலம் விளங்க வருதீரன்
ரதகஜ துரகப் படையாளள் நல்ல
        நடனமிடு பரிநகுல துடி நிபுன கொடியான்
மத எதுரை கானுகதை பாட எனக்கு
        வரந்தர வேணுமடி மதுரை மீனாட்சி
கள்ளரைக் கருவறுத்த தீரன் நல்ல
        கனமான மதுரை நகராண்டிடுஞ் சூரன்
உழக்கரிசி கானுகதை படிக்க நாளும்
        உலகந் தழைக்க வேணும் சிக்கந்தர் சாயுபு
படைவீரன் கானுகதை பாட சௌ
        பாக்கியம் நீகொட்டி பாண்டியன் மகனே
கடல் சூழும் புவியெல்லாம் விளங்க நல்ல
        கானுகதை தமிழினாற் கழறவே நினைத்தேன்


இளமை



பிறந்தது பனையூர் மண்ணு கானனை
        பிள்ளை போல எடுத்து வளர்த்தான் முசலாலி
சிறந்த வெள்ளைக் காரனிடத்தில் கானு

        சீராய் மூன்றரை வருஷம் பிள்ளையாய் வளர்ந்தான்