பக்கம்:கான்சாகிபு சண்டை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

திசைகட்டு ஒருகட்டாய் கட்டி நாளைத்

திருப்புவனத் திசையாகப் பாளையங்கை கூட்டி

மறவருட தளகர்த்த னென்று இந்த

வையக முழுதுமெனச் சொல்ல வேணுமென்றான்

ஆற்காடு போகிற போது நல்ல

"டிக்காகப் போவென்றார் முத்து வடுகையர்

தளவாய் முத்துவடுகநாதனிடம் கூறுதல்

சிங்கமே கவுரி வல்லையா" ஒரு

சேதிநான் வேளாளன் சொல்லுகிறேன் கேளு உரியரிசி பஞ்ச காலத்தில் கெவுரி

ஒருகோடி ஜனத்தையும் ரட்சித்த நாதா ஒற்றைக் குதிரை யேறாதே சாமி

உள்சுற்றுக் காட்டுவழி மிஞ்சி நடவாதே. நான் போயி வருமட்டுந் துரையே நம்முட

நாயகன் காளையார் கோயி லிருக்க இவிடத்தி லின்ன மிருந்தால் நாளை

மோசங்கள் வந்துவிடு முத்து வடுகையா சொல்லிய வாய் மூடுவதற் குள்ளே அப்போ

துரைமகனும் அண்ணன் முகமேறிட்டுப் பார்த்து

முத்துவடுகன் தளவாயிடம் கூறுதல்

அண்ணாவே தாண்டவ ராயா இப்போ

அன்பாக வொரு வயணஞ் சொல்லுகிறேன் கேளு

இவ்விடம் விட்டு ஆற்காடு போனால் உன்னை

என்றைக்குக் காண்பேனோ தாண்டவ ராயா

பொன் மிகுந்த திருச்சினாப் பள்ளிக்கு நீயும்

போகிறையோ உன்னழகு பார்க்கவேணு மென்று

முத்துவடுகன் பரிசுகள் வழங்குதல்

ஆண்டவன் முத்து வடுகையர் அந்த

நாழிகையில் காளாஞ்சி கருப்பனை யழைத்து

ராயப்பன் சேருவை யழைத்து அப்போ

நலங்கொண்ட யானைதனைக் கொண்டுவரச் சொல்லி

நேயமுடன் சித்திரங்க ளெழுதி அதிலே

நேராகப் பூச்சக்கிர அவதாவும்” வைத்து

58 முத்துவடுகநாதனுக்கு மறுபெயர். 59 இறவுடன் உருது அம்பாரி. 8 டிக்காக ஆடம்பரமாக (உருது)