பக்கம்:கான்சாகிபு சண்டை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

G7

நவாபு ராமனுக்குக் கூறுவது

மறத்தி மகன் சொல் மொழியைக் கேட்டு பாதா

மம்முதலி சாயபு துரையேது சொல்வானாம் கோட்டைக்கு தென் பாரிசத்தில் அங்கே

குளிர்ந்ததோர் காக்காத் தோப்பு வெளிதனிலே மூன்று நல்ல கூடார மடித்து அங்கே

மூன்று நல்ல பீரங்கி தானுமே யேற்றி பதினைந்து குறுக்கு வெளியிற் பரப்பி, அ ங் கே

பண்பான பூப்பந்த லலங்கரிக்கச் சொல்லி நாற்பது பறங்கி நாற்காலி அதிலே

சச்சவுக்க மாகவே போட்டிடச் சொல்லி ஏழு பாரா சுற்றிலும் வைத்து - நல்ல

ஈஸ்வரன் நவாபு துரை புறப்பட்டார் வெளியில் ஏறினார் வெள்ளை அவுதாவில் அப்போ

இருபுறமும் தம்பூரு முழங்குதொரு பக்கம் நகபத்து" முழங்கு தொரு பக்கம் அங்கே

நகரா’ முழங்குது சொல்லப் போகாது - முன்னுறு துரப்பு குதிரை நெருங்கி

முன்னணி யாகவே வருகுது பிறகாலே கருஞ்சட்டைக் காரரொரு பக்கம் நல்ல

கறுப்பு வர்ண பறங்கிகளைச் சொல்ல முடியாது செஞ்சட்டைக் காரனொரு பக்கம் சூழி

சிங்க நவாபுதுரை வெளியிலே வருகையிலே

நவாபு வெளியே வருதல்

காலையில் செம்மான’ மெழுந்தாற் போல் பாதர்

கனகமுடி நவாபுதுரை புறப்பட்டார் வெளியில் துரை வந்து கொலுவிருந்தா ரென்று அப்போ

துடியாகத் தாண்டவனும் வெளியிலே வந்து தம்பி வா தாமோதரம் பிள்ளை நல்ல

தனவானே அவுதாவி லேறடா வென்றான் அவுதாவில் நானேற மாட்டேன் - சும்மா

ஆனைமேல் நீயேறி வாவென்று சொன்னான் பெரிய வீட்டுக் காரனல்லோ நீயும் தம்பி

உன்னை விட்டு யானைமே லேறமாட்டே னானும் அதினாலே சந்தேக மொன்று மில்லை சும்மா

ஆனை மேலேறடா முல்லை மணிமார்பா

66. நகயத்து 67. நகரா முரசுகள்

  • செம்மானம் - செல்வானம்