பக்கம்:கான்சாகிபு சண்டை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83

பண்டங்கள் கொள்ளை

கடலை யவல் பொரி யுண்டை களுமே அங்கே கடைகளில் தட்டுத் தட்டாக யிருக்கிறதைக் கண்டு கருங் கச்சை சனங்களைப் பார்த்து அப்போ

கடைக் கண்ணை காட்டியே கைகாட்டி விட்டான் நெல்லரிசி வாருவார் சிலபேர் அங்கே

நேரிட்ட கடலை பொரி வாருவார் சிலபேர் இப்படியே கொள்ளை யவரடிக்க அப்போ

எங்கேயும் பொல்லாத கூச்ச லுண்டாச்சு

நவாபு இதைக்கேட்டு வருதல்

பட்டணங் கொல்லென்று போச்சு அப்போ

பாட்சா நவாபு துரையிது சேதி கேட்டு நாலு தலை வாசலை யடுத்து அப்போ

லாயத்துக் குதிரைக்குச் சீனிவைக்கச் சொல்லி புறப்பட்டார் மம்முதலி சாயபு சுற்றி

போர்வீரர் வெள்ளைக் காரர் முன்னே நடக்க வருகிறார் நவாபு துரையும் அப்போ

வலது கையி லைந்துபிடி கயிற்றை யெடுத்து தாமோதரம் பிள்ளையு மப்போது முல்லை

தாண்டவ ராயனை ஏறிட்டுப் பார்த்து என்னதான் சொன்னாலு மண்ணே நீயும்

எவ்வளவு மென்பேச்சைக் கேட்கிறதே யில்லை மம்முதலி வருகிற கோவத்தை இப்போ

மன்னவனே தாமோதரம் பிள்ளை போபோ பேய் கொண்ட தம்பி உனக்கு புத்தி யிவ்வளவோ தாமோதரம் பிள்ளை . நவாபை யொரு வார்த்தையினால் கட்டி அவன்

கையிலே வெகுமதியும் வாங்காமற் போனால் என்பேரு காராள னல்ல நான்

எடுத்ததும் தளகர்த்த மோதிரமு மல்ல சொல்லி யரை நாழிகைக் குள்ளாக நல்ல

துரைமகன் நவாபவரும் வந்துவிட்டா ரருகில் இருபேருங் குதிரைவிட் டிறங்கி அப்போ

ஈஸ்பர நவாபுமுன் கைகட்டி நின்றார் அரே பிள்ளை முல்லை மணிமார்பா உனக்கு

ஆரடா இந்தத் துடுக்குனக்குத் தந்தார் ராசாவு மிங்கே நானிருக்க எனது

ராச்சியத்தை நீகொள்ளை யிடலாமோ