பக்கம்:கான்சாகிபு சண்டை.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

ஆண்டவனே மம்முதலி சாய்பே உமது அடுமை நானொரு வயணஞ் சொல்லுகிறேன் கேளு கரும்பு என் சீமையி லில்லை சாயபு

கடலை பொரி யவலுண்டை கிடையாத தேசம் நெல்லரிசி எங்கள் சீமையிலே இப்போ

எள்ளளவுங் கிடையாது மம்முதலி துரையே அடுமை நான் சாப்பிடுஞ் சோறு இந்த

வரகரிசி சோறென்று சொன்ன மாத்திரத்தில் ரண்டுபடி வரகரிசி யவிழ்த்து அப்போ

நேரிட்ட மம்முதலி முன்னால்ே வைத்து அரிசியைப் பார்க்க மனிதர் இவர்கள்

ஆசையா லோடி யெடுத்திட்டார் துரையே இதற்கு நீர் கோபித்தே ரானால் அடுமைக்

கெங்கே குடியிருப்பு மம்முதலி துரையே அப்போது மம்முதலி பார்த்து ஒரு

ஆலோசனை செய்து சொல்ல லுற்றார் துரையும் செந்நெல் பெருத்ததுன் தேசம் என்று

முன்னமே புலித்தேவன் சொன்னானே எனக்கு இப்படிச் சொல்லுகிறாய் நீயும் இதிலே

ஆர் பேச்சை நிசமென்று நம்புவே னானும் நெல்லரிசி கிடையாதசேதி நீயும்

வந்ததே என்னிடத்தில் சொன்னையே யானால் உன்சனத்துக் கெல்லாம் படி கொடுப்பேன் முன்னே

உத்தமனே சொல்லாமற் போனாய் என்னிடத்தில் ரண்டுபை பணமதை யெடுத்து அப்போ

நேசமுடன் தளமந்திரி கையில் கொடுத்து இனசனத்துக் கெல்லாம் நெல்லரிசி தந்து

உத்தமனே படி கொடுமென் றுத்தரவு சொன்னார் அப்போ தாண்டவ ராயன் சொல்வான் சுவாமி

ஆண்டவனே நவாபே நான் சொல்லுகிறேன் கேளும் வந்துவெகு நாளாச்சு துரையே - எனக்கு

மன்னவனே மறுவசனஞ் சொல்லுமென்று கேட்க

நவாபு படையெடுக்க உத்தரவிடல்

அப்போது மம்முதலி துரையும் - பாதர்

அசையாத பிரட்டன் முகமேறிட்டுப் பார்த்து

வழிபாதை தெரியாம லிருந்தோம் நமக்கு

வழிகாட்ட வந்தார்க ளிருபிள்ளை மாரும்

பன்னிரண்டு பட்டாளத்தைக் கூட்டி பிரட்டர்

பாளையங் கூட்டி வடதிசை மதுரைக்கு நோக்கி