பக்கம்:கான்சாகிபு சண்டை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85

நல்ல தென்று வெள்ளைக் காரத் துரைகள் அப்போ

நலமான தம்பூ ரடித்துப் புறப்பட்டு காக்கா தோப்பு வெளி தனிலே வந்து

காசா கம்பளி சனத்தைக் கூடார மிறக்கி கொடிகளையுங் கொண்டு வந்து போட்டு பிரிட்டன்

கூடார மடித்திட்டான் சொல்லப் போகாது கானன் பீரங்கி பனிரெண்டு தனது கறுப்புச் சட்டைக் காரரது பட்டாள மெட்டு - மூவாயிரந் துருப்புகுதிரை சேர்ந்து

முந்நூறு வண்டியில் மருந்து குண்டு மேற்றி ரேக்லா முப்பதையுங் கூட்டி அப்போ

நேரிட்ட சாராய பீப்பாய்களு மேற்றி மதுரைக்குப் பயணமென்று பிரட்டன் நல்ல

உறுதியாய்க் கூடார மிறங்கின மாத்திரத்தில் தாமோதரம் பிள்ளையு மப்போது - முல்லை

தாண்டவ ராயன் முகம் நேரிட்டுப் பார்த்து தொண்டி வழி நடந்தோமே யானால் போக

வெகுதூரம் வெகுநாள் செல்லுமே யண்ணே துவரங் குரிச்சி வழி சென்றால் மலைப்

பாதையது கல்லுமேல் வண்டி யேறாது எந்த வழி போகலா மண்ணே என்று

இதமாகத் தாமோதரன் கேழ்க்கு மளவிலே தாண்டவ ராய தளமந்திரி நல்ல

சாதுரியமாய் வார்த்தை சொல்லுகிறா னப்போ அப்படியே ஏன் போகவேனுந் தம்பி நமது

நடுச்சீமை வழியாகப் போவோ மென்று சொன்னான் நடுச்சீமை வழியாகப் போனால் நமது

தேசத்தைக் கண்ணாலே பார்ப்பானே பிரட்டன் திரும்பி வரும்போது பெரிய பிரட்டன் நமது

தேசத்தில் தோரணங்கள் கட்டுவானே யென்றான் அப்படியே வழிக்கூட்டிப் போவேன் அந்த

அமைப்பு எனக்குத் தெரியுமோ தாமோதரம் பிள்ளை ஒருவரை யாகிலுங் காண்பிப் பேனோ அவனுக்

குகந்த வழி தெரியவோ கூட்டுவேன் பாதர் பகலெல்லாஞ் செடிக்குள்ளே யடிப்பேன் ராவில்

பாளையத்தைக் கூட்டுவே னென்று சொன்னா னப்போது

ராணுவம் பயணமாதல் சொல்லி யரை நாழிகைக்குள் பிரட்டன்

துடியாகப் பாளையத்தை யெழுப்பினான் பாதர்