பக்கம்:கான்சாகிபு சண்டை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

சனத்தை யெல்லா மலை போலே நிறுத்தி அப்போ

தம்பூரு முழங்கியே கோட்டைக்குள் நுழைந்தான் கோட்டைக்குள் பிரட்டன் போகு முன்னே கானன்.

குதிரை விட்டுப் பாளையத்தில் கலக்க வேணுமென்று நடத்தின னுருக்குச் சீராய் குதிரை அந்த

நாழிகையில் திருப்பூவன குளக்கரை தாண்டி வயல் வழியாய் குதிரைதனை விட்டு கானு

வருகிறான் திருப்பூவன ஆற்றுவழி நோக்கி கான்சாகிபு பிரட்டனது சேனையைத் தாக்குதல்

முதல் பாராக் காரனையும் வெட்டி ஒரு நொடிக்குள் பட்டாளத் துள்ளே விழுந்து - கத்தி முனை ரத்தங்க ளொழுக அப்போ

கான்சாகிபு வருகிறதைக் கண்டானே பிரட்டன் வந்திட்டான் கான்சாயபு வென்று பிரட்டன்

வரிசையாய்ப் பட்டாளத்தை மேற்குமுகந் திருப்பி டொப்பி கழட்டியே கீழே யடித்து பிரட்டன்

சுருக்காக முன்கைதனை கடித்த மர்த்திரத்தில் மூன் றணியாகப் பிரிந்து பட்டாளத்தை

முன்னேற்றிப் பிரம்பாலே மூட்டினான் பிரட்டன் மண்வாரி யிறைத்திட்டாப் போலே குண்டு

வருகிறதைத் திசை மதுரை கான்சாயபு பார்த்து

திருப்புவனப் போர்

ஒளித்து வைத்தான் பட்டாளத்தை பிரட்டன்

சேனை மேல் பாய்ந்திட்டான் கானன். இரண்டு கையி லிரண்டு முதல்பட்டா பிடித்து

நேரான பிரட்டனிட பாளையத்தில் விழுந்து வீசினான் துரை மதுரை காணன் அப்போ

விழுகிற சிப்பாய் தலைகள் சொல்லப் போகாது கையற்று விழுகிறது சிலது அங்கே

காலற்று விழுந்த பேர் சொல்லப் போகாது தலையற்று விழுகிறது சிலது - அப்போ

தாறுமாறாய் மூன்று துண்டாய் விழுகிறது சிலது - வெள்ளரிக்காய் வீசினாற் போல பாதர்

வீசினான் சிப்பாய்களை பொல்லாத கானன். துப்பாக்கி திரும்புவதற் குள்ளே பாய்ந்து

துடியாக வெட்டினான் திசை மதுரை காணன்