பக்கம்:காப்டன் குமார்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பதிப்புரை

ன்பு, சத்தியம், நேர்மை, விடாமுயற்சி, அளவற்ற துணிச்சல் இவற்றின் துணையோடு; காணாமற்போன தன் தங்கைக்காகக் கடலில் குதித்து- அக்கிரமக்காரர்களின் கையில் சிக்கி- இறுதி வரைப் போராடி வெற்றி கொண்ட ஒரு வீர மாணவனைப் பற்றிய அருமையான கதை இது.

இந்நூலை எழுதிய ஆசிரியர் நீலமணி, குழந்தைகளுக்காகப் பல நாவல்களும், சிறுகதைகளும், ரேடியோ நாடகங்களும் எழுதிப் புகழ்பெற்றவர். “அன்புப் பணிக்கு ஓர் அன்னை தெரசா" என்னும் வாழ்க்கை வரலாற்று நாலை எழுதி 1978-ல் குழந்தை எழுத்தாளர் சங்கம் நடத்திய இலக்கியப் போட்டியில் “ஏ. வி. எம் ”மின் அறக்கட்டளை முதல் பரிசான தங்கப் பதக்கத்தையும்; 1983-ல் எழுதிய “தென்னைமரத் தீவினிலே" என்னும் குழந்தைகள் நாவலுக்காக “ஏ. வி. எம்”ன் வெள்ளிப் பதக்கத்தையும்; "கவிமணியின் கதை”க்காக தமிழக அரசின் பரிசையும் பெற்றவர்.

சிறுவர்களின் உள்ளத்தில், அன்பு, பண்பு, வீரம், சத்தியம், நேர்மை ஆகிய நற்பண்புகளை வளர்க்கும் வகையில் எழுதிவரும் இவரது படைப்புகளைத் தொடர்ந்து வெளியிடுவதில் பெருமைப்படுகிறோம்.

ஜானகி நீலமணி.