பக்கம்:காப்டன் குமார்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

அதற்காகப் பரிகாசம் செய்யாதீர்கள்.வாடிப்போய் வந்திருக்கும் அவர்களது பிஞ்சு உள்ளங்களில் அன்புமழை பொழியுங்கள். கசப்பான அவர்களது இறந்த காலத்தை மறந்து -- ஒளிமயமான எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கை அவர்கள் உள்ளத்தில் சுடர்விட வழி செய்யுங்கள்.

அருகிலுள்ள ஏழைச் சகோதரனுக்கு அன்போடு இரங்கும் குணம்படைத்த ஒருவனே-ஆண்டவனுக்கு மிகவும் பிடித்த ஒருவனாக இருக்க முடியும்.

அன்பை விதைத்தால்தான்- அன்பை அறுவடை செய்ய முடியும். ஆகவே மாணவமணிகளாகிய நீங்கள் ஒவ்வொரு வரும் இறைவனுக்குப் பிரியமுள்ளவனாக விளங்க இன்று முதல் எவ்வித பேதமுமின்றி- சக மாணவர்களிடம் மட்டு மின்றி அனைவரிடமுமே அன்போடு இருக்க பிரதிக்ஞை எடுத்துக் கொள்ளுங்கள்.

அன்பு இருக்குமிடத்து- பேதமிருக்காது :

அன்பு இருக்கு மிடத்து- ஏற்றத் தாழ்வு இருக்காது. அன்பினால் இந்த உலகையே வெல்லலாம்.

இந்த நாவல், உங்களிடம் இயல்பாக உள்ள நல்ல குணங்களை மீண்டும் தூண்டிவிட ஒரு சிறிதேனும் உதவுமானால்; அதையே என் படைப்பின் வெற்றியாகக் கருதுவேன்.

இனியும் நான் உங்களை நிறுத்தி வைக்கப் போவதில்லை. தாராளமாகச் சென்று காப்டன் குமாரைச் சந்தியுங்கள்.

அன்புடன்,
நீலமணி.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காப்டன்_குமார்.pdf/9&oldid=1117873" இலிருந்து மீள்விக்கப்பட்டது