பக்கம்:காப்டன் குமார்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109. யும் கூட வரும்படி அழைத்தான். ஆனால் தனக்கு முக்கியமான வேறு வேலையிருக்கிறது என்று சொல்லி அவன் போய்விட்டான். குமாருக்குத் திடீரென்று ஏதோ ஒருவிதப் பயம் உண்டாயிற்று. ஆயினும் துணிந்து தோப்பினுள் சென்றான். மன்னாடியின் கடிதமும், மாமாவின் போட்டோவும் பத்திரமாக இருக்கின்றனவா என்று மீண்டும் ஒருமுறை பார்த்துக்கொண்டான். குமார் பங்களாவை அடைந்ததும், அடே யப்பா, எத்தனை பெரிய பங்களா!?? என்று மலைத்தே போனான். அழகான கதவு. 'ஐயா, ஐயா’’ என்று இரு தடவைகள் தட்டினான். பதி லில்லை. மூன்றாம் முறை சற்று வேகமாகவே தட்டுனான். யாரது?’ என்று ஒர் அதிகாரக் குரல் உள்ளேயிருத்து உறுமிய வண்ணம் வந்தது. மறுகணம், கதவைத் திறந்துகொண்டு தன் முன் வந்து நின்ற உருவத்தைப் பார்த்ததும் குமார் அம்படியே நடுங்கிப் போனான். ஆட்டுக்கிடா மீசையும், ஆனை உடலும், கைலி வேட்டியில், ரங்கூன் பச்சைப் பெல்டும், ரெளடிக் கிராப்புமாகக் காட்சியளித்த மாமிசபர்வதத்தைக் கண்டால் யார்தான் பயப்படமாட்டார்கள். யோர் நீ?-என்ன வேண்டும்??? என்றது அந்த மனிதமலை அதிகாரக் குரலில்.