பக்கம்:காப்டன் குமார்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. மாமிச பர்வதம் بقایای ========= திங்கட் கிழமை விடியற்காலை சுமார் மூன்று மணி இருக்கும். குமாரையும் வேறு ஒரு மனிதனை யும் ஏற்றிக் கொண்டு சிறிய படகு ஒன்று மகாபலி புரத்துக்குச் சற்று தூரத்தில் கரை சேர்ந்தது. குமார் வந்த மின்சாரப்படகும், அதிலிருந்த பொருள்களும் வழியில் வேறு ஒரு படகுக்குக் கைமாறி எங்கோ சென்றுவிட்டன. குமாரோடு வந்த ஆள்தான் வழி காட்டி. அதிகாலையில் அந்தக் கடுங்குளிரில் இரு வரும் மூன்று மைல் தூரம் நடந்து மகாபலிபுரத்தை அடைந்தார்கள். அங்கிருந்து புறப்பட்ட ஒரு லாரியில் இருவரும் ஏறிக் கொண்டு சென்னையை அடைந் தார்கள். கூட வந்த ஆள்தான் குமாருக்கும் சேர்த்து லாரிக்காரனிடம் பணம் கொடுத்தான். குறிப்பிட்ட இடம் வந்ததும் இருவரும் இறங்கி னார்கள். பிறகு கொஞ்ச துாரம் நடந்து சென்றார்கள், சற்று ஒதுப்புறமாக இருந்த ஒரு தோப்பை அடைந்ததும், இதுதான் எஜமான ருடைய தோட்டம். பங்களா உள்ளே இருக்கிறது. நீ போ?? என்றான் வழிகாட்டி. குமார் அந்த ஆளை