பக்கம்:காப்டன் குமார்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113 குமாரால் தாங்க முடியவில்லை. நாளுக்கு நாள் சிறுவர்களின் கேலியும் கிண்டலும் வளர்ந்து பெருகின. குமாரைப் போலவே, பர்மாவிலிருந்து சொத்து சுகங்களையெல்லாம் இழந்து அறிாதை யாக வந்துள்ள அகதிக் குழந்தைகள் சிலரும் அந்தப் 1. ஸ் எரி யி ல் சேர்க்கப்பட்டிருந்தார்கள். குமாருடைய மாமா பணக்காரர். ஆகையால் அவன் பட்டுச் சொக்காய் போட்டுக்கொண்டு வந்தான். ஆனால் மற்ற அகதிக் குழந்தைகளோ?-பெற்றோர் கள் சாப்பாட்டுக்கே த.விக்கும்போது பகட்டான சட்டைக்கு எங்கே போவார்கள்? கிழிசலையோ, அக்கையோதான் அவர்களால் போட்டுக் கொண்டு வர முடியும். இது பள்ளியிலுள்ள பணக்கார வீட்டு குழந்தைகளுக்கு இன்னும் கேலி செய்ய இடம் கொடுத்தது. அந்த அகதிக் குழந்தைகளின் கிழிசல் சட்டை களில் பென்சிலால் குத்தினார்கள். யாருக்கும் தெரியாமல் - பொடிக்கற்களைப் பொறுக்கி, பர்மா தபால் பெட்டி?’ என்று அந்தப் பையன்களின் முது கிலுள்ள சட்டைக் கிழிசலில் போட்டார்கள்; சற்று மேலே இடித்து விட்டாலும், கப்பலில் உள்ள உன் அழுக்கையெல்லாம் எங்கள் சட்டையில் ஏற்றாதே?? என்றார்கள். ஒர் அகதிப் பையனுக்காக, பள்ளிக் கூடம் விட்டதும் குமார் பெரிய சண்டை போட்டு ஒருவனை நொறுக்கி விட்டான். ஆனால், இதனால் எல்லாம் அவர்கள் அடங்கிவிட வில்லை. மாணவர் கள் இரண்டு கோஷ்டிகளாகப் பிரிந்தார்கள். அகதி