பக்கம்:காப்டன் குமார்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 களுடன் குமாரையும் பையன்கள் ஒதுக்கி விட்டார் கள். ஆனால் அவன் இதற்கெல்லாம் கவலைப்பட வில்லை. o மாமாவிடம் சொன்னதற்கு, இதனால்தான் நான் அப்போதே நீ பள்ளிக்கூடம் போக வேண்டாம் என்று சொன்னேன். உனக்கெதற்குப் படிப்பு? நமக்குள்ள சொத்தே நாலு தலைமுறைக்குக் கானுமே - பேசாமல் நான் தொழிலைச் சொல்லித் தருகிறேன். வீட்டோடு இரு?’ என்று தம் உள்ளக் கிடக்கையைத் திறந்து காட்டினார். ஆனால் அதற்குக் குமார் இணங்காமற் போகவே, மாமா மாமிச பாவதத்தை அனுப்பி கலாட்டா செய்கிற பையன்களைப் பார்த்து வரச் சொன்னார்; உபாத்தியாயரிடமும் சொல்லி வைத் தார். மறுநாள் குமாருடன் வந்த மாமிச பர்வதத் தைக் கண்டதும் பையன்கள் எல்லாம் பலமாகக்கூட மூச்சுவிடவில்லை. ஆனால் இது தினம் நடக்கிற காரியமா? குமார் மாமிச பர்வதத்தைக் கூட வர வேண்டாமென்று சொல்லிவிட்டான்! அவ்வளவுதான்! மறுநாள் பையன்கள் எல்லாம் பழையபடி வால்தனம் செய்ய ஆரம்பித்து விட்டார் கள். 'ஏய், அல்லாவுதீன் இன்று பூதத்தைக் கூட் டிக் கொண்டு வரவில்லைடோய்?’ என்று பரிகசித் தார்கள். குமார் பதிலே பேசவில்லை. இந்தப் பையன்களைத் திருத்த முடியாது; இனிமேல் மாமா விடமும் சென்று புகார் செய்வதில்லை என்ற முடி