பக்கம்:காப்டன் குமார்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

115 வுக்கு வந்துவிட்டான். அவர்தான் பள்ளிக்கூடமே வேண்டாம் என்று சொல்கிறாரே! குமார் இருப்பது மற்ற அகதிக் குழந்தைகளுக்குப் பெருத்த தென்பாக இருந்தது. ஒரு நாள் குமார் பள்ளிக்கூடம் வராவிட்டால் கூட மற்ற பையன்களுக்கு கொண்டாட்டமாயிருந்தது. உ பா த் தியாயரிடம் சொல்லியும் பல்ன் ஏற்படவில்லை. பாவம், அவர் என்ன செய்வார்! நல்ல புத்தி சொல்லுவார்; அதிகம் போனால் ஒர் அதட்டு அதட்டுவார். மீறிக் கையை நீட்டினால் பையன்களின் பெற்றோர்கள்;அவருடைய உத்தியோகத்துக்கே உலை வைத்துவிடுவார்களே! குமார், இதனாலெல்லாம் அந்தத் திமிர்பிடித்த சில பையன்களைச் சரிக்குச் சரி பார்த்துவிடுவது என்று முடிவுக்கு வந்துவிட்டான். ஆனால் குமாரின் அகதிக் கோஷ்டியிடம் அன்பு செலுத்தும் மாணவர் களும் நிறைய இருந்தனர். இதனால் குமாரின் கை இங்கியே இருந்தது. எவனாவது, அவர்களில் ஒரு வனை, பர்மாக்காரா?? என்றால், ஏய்; சீனக் காரா! பள்ளி எல்லையை விட்டு வெளியே வாடா! உன் முதுகுத்தோலைச் சட்டை தைத்துச் சிப்பாய் களுக்கு அனுப்பிவைக்கிறேன்? என்று எதிர்ச் சவால் விடுவான் . ■ அகதிகள் கோஷ்டிக்குக் குமார்தான் தலைவன். குமார் வந்த பிறகு மற்ற அகதிக் குழந்தைகள் சற்று நிம்மதியாகப் படித்தார்கள். தைரியமாகத் தலை நிமிர்ந்து நடந்தார்கள். ஆனால் அடிக்கடி, அவர்