பக்கம்:காப்டன் குமார்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 16 களுடைய சிலேட்டுக்களும், புஸ்தகங்களும மடடும மாயமாய் மறைந்துகொண்டிருந்தன. அந்தத் திருட் டையும் குமார் கண்டுபிடித்து எதிர்க்கோஷ்டிப் பையன் ஒருவனை மறித்து மானத்தை வாங்கி விட்டான். நாளடைவில் இரண்டு கட்சிகளும் வலுப் பெற்றுவிட்டன. இதனால் எந்த நிமிஷம் பள்ளியில் போர் மூளுமோ என்ற நெருக்கடியில்தான் இருந்தது நிலைமை. ஆனால் அந்தச் சண்டைக்கு ஈடு கொடுத்து, தாங்களும் இந்தியர்களே-பர்மாக்காரர் களோ, அந்நியர்களோ அல்ல-என்று பையன் களிடையே உரிமையை நிலைநாட்டிக் கொள்ள, குமார் தன்னைப் பூரணமாகத் தயார் செய்து கொண்டுவிட்டான். இதனால் அகதிக் குழந்தை களுக்குத் தேவனாகவும்; எதிர்க்கட்சிக்குச் சைத் தானாகவும் காட்சியளித்தான். ஆனால் நாளடைவில் மற்றப் பையன்களும் திருந்தி அகதி மாணவர்களிடம் அன்பு செலுத்த ஆரம்பித்தனர். நாட்கள் சில சென்றன. மாமாவின் வீட்டிலிருந்த அந்தரங்கங்கள் எல்லாம் குமாருக்கு ஓரளவு புரியத் தொடங்கின. மாமாவுக்குப் பகல்தான் இரவு-இரவு தான் பகல். அவருடைய வீட்டுச் சுவருக்கெல்லாம் காதுகள் உண்டு. யாராவது கதவு என்று எண்ணித் திறக்கப்போவது கதவாக இருக்காது;-சுவர்? என்று எண்ணி முட்டிக்கொண்டால் அது உடனே கதவாகத் திறந்து வழிவிடும். அந்த வீட்டுக்குள் நடக்கிற அத்தனை விஷயங் களையும் அவர் தம்முடைய அறையிலிருந்தே பார்க்க