பக்கம்:காப்டன் குமார்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I - பசி "ஆமாம், ஆமாம். கண்டிப்பாக உனக்குத்தான் பட்டம்-வீரப்பதக்கம் எல்லாம் கொடுக்க வேண்டும். உன் அண்ணன் கடலில் குதித்தது வெறும் தண்டம்! பொழுது விடிந்தால், இருட்டுகிறவரை நீதான் சளைக்காமல் மாடியிலிருந்து தெருவையே பார்த்துக் கொண்டிருந்து குமாரை கண்டுபிடித்து விட்டாய். ஆகையால் இன்றிலிருந்து ஏர்மார்ஷல் சாந்தி... சரிதானே, போ என்றார் கருணாகரன். அப் பொழுது எழுந்த சிரிப்பொலியில் கட்டிடமே அதிர்ந் தது. சரி! அப்போது நான் வரட்டுமா மிஸ்டர் கருணாகரன். நேற்றுக் காலையில் கூட கவலைப் பட்டுக்கொண்டிருந்தோம் குமாரைப் பற்றி. எப் படியோ தெய்வமாக் குமாரை நம்மிடம் கொண்டு வந்து சேர்த்துவிட்டது...நீங்கள் ரிபோர்ட்டை வாபஸ் வாங்கி விடுங்கள் இனி எனக்கென்ன வேலை இருக்கிறது...வரட்டுமா?’ என்று எழுந்தார் இன்ஸ் பெக்டர். உடனே குமார் 'அப்படிச் சொல்லாதீர்கள் இன்ஸ்பெக்டர் சார். உட்காருங்கள். உங்களுக்கா வேலை இல்லை?இனிமேல்தான் உங்களுக்கு நிறைய வேலை இருக்கிறது. இதோ நான் தருகிறேன். அது ஒரு பெரிய வேலை! தயவுசெய்து ஏற்றுக் கொள்ளுங் கள். எல்லாம் சாந்தி கிடைக்கட்டும் என்று காத்திருந் தேன். இனி என்ன?!?? என்று தன் நிஜாரிலிருந்து ஒரு சிறிய பொட்டலத்தை எடுத்து இன்ஸ்பெக்டர் எதிரில் இருந்த மேஜைமீது வைத்தான்.