பக்கம்:காப்டன் குமார்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 கதவுக்குப் பின்னாலிருந்து, ஒரே அச்சில் கடைந்தெடுத்த தங்க விக்கிரகம்போல் இருந்த குமாரையும் சாந்தியையும் மாறி மாறி இமைகொட் டாமல் பார்த்துக்கொண்டே யிருந்தாள் கற்பகம்மாள். -அழகு என்றால் இப்படி ஒரு அழகா ஆண் பிள்ளைக்கு; கண்ணனைப் போலல்லவா இருக் கிறான்? பெற்றவர்கள்தான் கொடுத்துவைக்கவில்லை நாமாவது ஒடிச்சென்று பையனை வாரி எடுத்துக் கொள்ளலாம் என்றால் - இந்த இன்ஸ்பெக்டர் அல் லவா கூட இருக்கிறார்!-- என்று கற்பகம் துடித்துக் கொண்டிருந்தாள். குமாரைக் கண்டதுமே அவளை யறியாமல் மற்றொரு பிடிப்பு விழுந்துவிட்டது. இதற்குள் இன்ஸ்பெக்டரும் திரும்பி வந்து விடவே, மிஸ்டர் பாபு...இவன்தான் சாந்தியின் அண்ணன் குமார்; தெரிந்து கொண்டிருப்பீர்களே” என்று குமாரை இன்ஸ்பெக்டர் கருணாகரனுக்கு அறி முகம் செய்து வைத்தார். வெறும் குமார் என்கிறீர்களே...'காப்டன் குமார்’ என்று சொல்லுங்கள் தங்கைக்காக வீர சாக லம் புரிந்த பெரிய கடல் வீரனாயிற்றே. காப்டன் குமார் என்றே அழையுங்கள் என்றார்?? இன்ஸ்பெக் டரும் பதிலுக்குப் பெருமையாக. 'அப்போது எனக்கு மட்டும் ஒரு பட்டமும் கிடையாதோ? அண்ணாவா என்னைக் கண்டுபிடிச் சான்? நான் தானே அண்ணனைக் கண்டுப்பிடிச் சேன்!’ என்றாள் சாந்தி, மழலை கொஞ்ச. .