பக்கம்:காப்டன் குமார்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 I அப்பா, அப்பா! அண்ணாவை நான் கண்டு பிடித்துவிட்டேன். அதோ மாடியிலே! இல்லை இல்லை தெருவிலே போய்க்கொண்டிருக்கிறான் அப்பா!' என்று சாந்தி மேல்மூச்சு வாங்க இரைக்க இரைக்க வந்து சொன்னான். இன்ஸ்பெக்டரும், கருணாகரனும் ஏககாலத்தில் வாசலுக்கு எழுந்து சென்றனர். அப்போது அங்கே குமார் கேட்டைக் கடந்து அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தான். வாசற்படி ஏறுவதற்குள், 'அண்ணா!’’ என்று சாந்தி ஓடிவந்து குமாரைக் கட்டிக்கொண்டாள். தங்கையைத் தழுவிக் கொண்ட குமாரின் கண்களில் கண்ணிர் பெருக்கெடுத்தது. சரி சரி, வாருங்கள் உள்ளே. திண்ணையிலே எல்லாக் கதையும் முடித்து விடுவீர்கள் போல் இருக் கிறதே அண்ணனும் தங்கையுமாக’ என்று கருணா கரன் அவர்களை உள்ளே அழைத்தார். அப்போது ஒரு கான் ஸ்டபிள் வாசலில் இன்ஸ்பெக்டரை நோக்கி எஸல்யூட் அடித்தபடி நிற்கவுமே, பாபு கான் ஸ்ட பிளை நோக்கிச் சென்றார். குமாரையும், சாந்தியையும் அழைத்துக்கொண்டு உள்ளே சென்ற கருணாகரன் உற்சாக மிகுதியினால் 'கற்பகம், கற்பகம். இதோ, இங்கே யார் வந்திருக் கிறார்கள் என்று வந்து பாரேன்’ என்று சமைய லறையிலிருக்கும் தம் மனைவிக்கு உரக்கக் குரல் கொடுத்தார். கா-8