பக்கம்:காப்டன் குமார்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22, யும், அடிக்கடி உயர்ந்த மருந்துகள் வாங்கி வந்ததில், தீர்ந்து போயிற்று. இனிமேல் மருந்துக்குப் பணம்? இதை எண்ணிப் பார்த்ததும் திருமுருகு வெலவெலத்துப் போனான். நேற்றுவரை பல லட்சங்களுக்கு அதிபதியாக இருந்த அவனது எஜமானரின் நிலை என்ன? இன்று அவனைவிட மோசமானதாக அல்லவா ஆகிவிட்டது? இமைக்கும் நேரத்திற்குள் செப்பிடு வித்தை போல் எல்லாம் கன வாகி விட்டாத! இந்த அதிர்ச்சியை யாரால்தான் தாங்க முடியும்? எஜமானர் சுருண்டு விட்டதில் விந்தை என்ன இருக்கிறது? இப்படி எத்தனை குடும்பங்கள் தவிக்கின்றனவோ? s கோடீசுவரர்களின் வீட்டுக் குழந்தைகள் வயிற்றுக் கஞ்சிக்கும் கூழுக்கும் பிச்சை எடுப்பதா? 'மாமா...... பசிக்குது...’’ என்ற சாந்தியின் மழலைமொழி திருமுருகுவின் சிந்தனையைத் தடுத்து நிறுத்தியது. ஒரு தட்டிலே குழந்தைக்கும் மற்றொரு தட்டிலே குமாருக்கும் சாதம் பிசைந்து எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தான். இருவரும் சாப்பிட் டானதும் திருமுருகு வெளியே புறப்பட்டான். தெம்பி, நான் அப்பாவுக்கு மருந்து வாங்கி வருகிறேன். நீ தங்கையையும் அப்பாவையும் ஜாக் கிரதையாகப் பார்த்துக்கொள். நான் ஒரு நொடியில் வந்துவிடுகிறேன்?’ என்று கூறிப் புறப்பட்டு வீதிக்கு வந்த திருமுருகு நேராகத் தன் வீட்டிற்கு வந்தான். எஜமானரின் மருந்துக்காக மனைவியிடம் கேட்டுப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காப்டன்_குமார்.pdf/25&oldid=791236" இலிருந்து மீள்விக்கப்பட்டது