பக்கம்:காப்டன் குமார்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23. பத்து கியாத் (பர்மா நாணயம்)களை வாங்கிக் கொண்டு புறப்பட்டான். மருந்துகளோடு திருமுருகு பங்க ளா ைவ அடைந்தபோது அங்கே அவன் கண்ட காட்சி, குமாரும் சாந்தியும் ஒ’வென்று அழுது கொண் டிருந்தார்கள். பெரு வலிப்பு வந்து ராமசாமிப் பிள்ளையின் விழிகள் செருகிக் கொண்டிருந்தன. திருமுருகு ஓடிச் சென்று எஜமானரின் தலையைப் பிடித்துக்கொண்டான். குழந்தைகள் இருவரையும் தன் அருகில் அழைத்துக்கொண்டு வந்து நிறுத்திக் கொண்டான். வாங்கிவந்த மருந்தைக் குமாரின் கையால் தன் தந்தையின் வாயில் ஊற்றச் சொன்னான். திருமுருகு, செய்யவேண்டிய காரியங்களை எல்லாம் வெகு அழகாய்த்தான் செய்தான். இறக்கு முன் தம் மக்களைப்பார்த்துக்கொண்டே இறக்கட்டும் என்று அவர்களை அவர் அருகில் அழைத்து வைத் துக் கொண்டான். தனயன் கையால் தந்தைக்குக் கடைசி நீர் வார்க்கச் செய்தான். இத்தனைக்கும் அவர் தன்னிடம் ஏதாவது வாய்திறப்பார் என்று எதிர்பார்த்த திருமுருகு ஏமாந்தான். எண்ணங்கள் எல்லாம் அவர் தேங்கிவிட்டன. அவரது இதயத்திலேயே ராமசாமிப்பிள்ளையின் விசேஷங்கள் எல்லாம் கூட முடியவில்லை; அதற்குள்ளேயே பர்மிய அதி காரிகள் அவரது வீட்டை ஆக்கிரமித்துக் கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காப்டன்_குமார்.pdf/26&oldid=791238" இலிருந்து மீள்விக்கப்பட்டது