பக்கம்:காப்டன் குமார்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 விட்டனர். குமாரும் சாந்தியும் நடுத்தெருவில் நிற்பதைக் காணச் சகியாத திருமுருகு அவர்களைத் தன் வீட்டிற்கு அழைத்துப் போனான். இந்தியாவிலிருந்து பிழைப்பைத் தேடிவந்தவன் தான் திருமுருகுவும். அவனுக்கு இரண்டு மனைவி கள்; பர்மாவும், சீனாவுமாக. அடுக்கடுக்காக ஆறு குழந்தைகள். நான்கு வருஷங்களுக்கு முன் சர்க் கார் செய்த அறிவிப்பின்படி அவன் அன்றே பர்மா பிரஜையாகிவிட்டான். மேலும் அவனுக்கு இந்தியா வில் யாருமேயில்லை. குமார் மட்டும் திடமாகத் திருமுருகுவிடம் கூறி விட்டான். முருகா! நானும் தங்கையும் பர்மாவில் தங்கப் போவதில்லை. இந்தியாவுக்குத்தான் போகப் -போகிறோம். முதல் கப்பலிலேயே எங்களை ஏற்றி அனுப்பிவிடு?’ என்றான். திருமுருகு மனம் குமைந்தான். 'எப்படித் தம்பி, தன்னந்தனியாக அத்தனை தூரம் குழந்தை யையும் உன்னையும் கப்பலில் அனுப்புவேன்? மனசு கேட்கவில்லையே!?? - நான் தனியாகவா போகப்போகிறேன்; நேற்றுத் துறைமுக வாயிலில் பார்க்கவில்லை? எத்தனை ஆயிரமாயிரம் சாந்தியைவிடச் சிறிய குழந்தைகள் அழுதுகொண்டே சென்றார்கள்! அவர் களையெல்லாம் விடவா??? திருமுருகு மனத்திற்குள்ளேயே பெரிதாக அழுது விட்டான். குமாரும் சாந்தியும் அவன் தோள் மீதும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காப்டன்_குமார்.pdf/27&oldid=791240" இலிருந்து மீள்விக்கப்பட்டது