பக்கம்:காப்டன் குமார்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 என்ன, முதல் வகுப்பிலா??-கப்பலின் மேல் தளத்தைப் பார்த்தார் பெரியவர். 'அங்கே இல்லை மாமா, இன்னும் மேல்ே?? என்று ஆகாயத்தைச் சுட்டிக் காட்டினான் குமார். அப்போதுதான் அவரும் அவனுடைய முகத்தைக் கவனித்தார். கண்களிலே கண்ணிர் பளபளத்தது. பெரியவருக்கு ஏண்டா கேட்டோம் என்றாயிற்று ஒரு கணம். 'அப்போது பர்மாவிலே உங்களுக்கு இனி வேறு யாரும் இல்லை அல்லவா??? 'ஊஹூம்...அதுதானே மாமா, சாந்தி என்ன ஆனாளோ என்று கவலைப்படுகிறேன். எங்கள் வீட்டு வேலைக்காரன் திருமுருகு இருக்கிறான். அவன் வீடுகூட எங்கே இருக்கிறது என்று அவளுக் குச் சொல்லத் தெரியாது!: 'அப்போது இந்தியாவில் உனக்கு யார் இருக் கிறார்கள்? யாருடைய வீட்டுக்குப் போகிறாய்??? 'யார் இருக்கிறார்கள்! என் மாமா ஒருவர் பட்டணத்தில் இருக்கிறாராம். அவரைக்கூட எனக்கு இப்போது சரியாக அடையாளம் தெரியாது. நான் சிறியவனாக இருந்தபோது அம்மாவைப் பார்க்க அவர் பர்மாவுக்கு ஒரு சமயம் வந்திருந்தார். அப் போது அவருடன் நாங்கள் எல்லோரும் படம் பிடித் துக் கொண்டோம். அதன்பிறகு அம்மாவுக்கு உடம் புக்கு அதிகமாயிருந்தது. அப்பா தந்தி அடித்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காப்டன்_குமார்.pdf/36&oldid=791260" இலிருந்து மீள்விக்கப்பட்டது