பக்கம்:காப்டன் குமார்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 அம்மா இறந்த பிறகுகூட அவர் வரவில்லை.-- குமார் ஒரு நீண்ட பிரசங்கமே செய்து நிறுத்தினான். 'அப்படியானால் நீ பட்டணத்தில் அவரை எப்படிக் கண்டுபிடிப்பாய்: விலாசம் இருக்கிறதா?” இைல்லை!??

  • பிறகு.?? 5

'போட்டோ இருக்கிறது!?? போட்டோவா??? - பெரியவர் ஆச்சரியத் துடன் கேட்டார். "ஆமாம், இதோ பர்மாவிலிருந்து நான் எடுத்து கொண்ட ஆஸ்தி இது ஒன்றுதான்? என்ற குமார் சட்டென்று தன் டிராயரிலிருந்து ஒரு சிறிய தகர டப்பாவைத் திறந்தான். பாம்பாட்டியின் பெட்டிக் குள் வாலைச் சுருட்டிக்கொண்டு இருக்கும் பாம்பு மூடியைத் திறந்தவுடன், சீறியபடி தலையைத் தூக்குமே அதைப்போல், குமார் டப்பியைத் திறந்த வுடன் அதிலிருந்த போட்டோ பிரிந்து வெளியே துள்ளி விழுந்தது. அதை எடுத்துப் பிரித்துக் காண் பித்தான் குமார். குமார் கூறியது போலவே, அது ஒரு பழைய குடும்பப் படம். குமாரின் தாய் தந்தையர்கள், வேலைக்காரன், நண்பர்கள் எல்லோரும் இருந்தார் கள். அதில் குமார் குழந்தை. சாந்தி பிறந்திருக்க வில்லை. s

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காப்டன்_குமார்.pdf/37&oldid=791261" இலிருந்து மீள்விக்கப்பட்டது