பக்கம்:காப்டன் குமார்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 அவர் அவனைக் கூர்ந்து கவனித்தார். என்ன இருந்தாலும் அவன் சிறுவன்தானே! பாவம் அவன் எதைக் கண்டான்! வளர்ந்து பெருகும் பட்டணத்தின் தன்மையை யும், அதில் உருமாறிப் போகும் மனித வர்க்கத்தின் கதையையும் பற்றி அவர் அவனுக்குப் புரியும்படி விளக்கினார். ஆயினும், அவன் இமாமாவைக் கண்டுபிடிப்பதில் தாமும் கூட இருந்து உதவுவதாக அவர் வாக்களித்தார். ஆனால் குமார் மனம் உடைந்து போனான். இதற்குள் ‘டி’க்குச் சமயமாகிவிடவே எல்லோ ரும் எழுந்து போனார்கள். பெரியவரும் எழுந்தார்; குமாரையும் கூப்பிட்டார். அவன் பிடிவாதமாக வர மறுத்துவிட்டான். இறுதியில் பெரியவர் தனியாகச் சென்று உயை குடித்துவிட்டு வந்தார். அது அவருக்குச் சுவைக்கவே இல்லை. பகலெல்லாம் உலகைச் சுற்றி வந்த களைப்புத் தீர, கதிரவன் கடலிலே நீராடக் குதித்துவிட்டான். அலைகளின் தாலாட்டிலே கப்பல் ஒரு பெரிய மாளிகையைப்போல, நீரிலே மிதந்து சென்றுகொண் டிருந்தது. சிறிது சிறிதாக எங்கும் இருள். கவிந்து கொண்டே வந்தது. நட்சத்திரப் பூக்கள் வானத்து வரப்பில் பூத்துக் குலுங்கின. சாதாரண சமயமாயிருந்தால் குமார் இதை யெல்லாம் எவ்வளவு ரசிப்பான்? கப்பலில் நீண்ட துாரம் பிரயாணம் செய்ய வேண்டும். விமானத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காப்டன்_குமார்.pdf/39&oldid=791264" இலிருந்து மீள்விக்கப்பட்டது