பக்கம்:காப்டன் குமார்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 அவள் மனத்தைக் கொள்ளை கொண்டு விட்டன. மெதுவாக மடிமீது தூக்கி வைத்துக் கொண்டாள். o 'கற்பகம் - குழந்தையின் பெயரைக் கேளு. முதலில்?’ என்று குஷியோடு கூறிக்கொண்டே டிரைவர் பக்கம் திரும்பினார். மறு கணம் கார் அவரது வீட்டை நோக்கிப் பறந்துகொண்டிருந்தது. வாஞ்சையுடன் குழந்தையின் தலையை வருடிய வண்ணம் பாப்பா...உன் பெயர் என்னம்மா??? என்று அன்பு ததும்பக் கேட்டாள் கற்பகம்மாள். பெண் சிணுங்கினாள். வழி நெடுக அந்த அம்மாள் தான் பேசிக் கொண்டே வந்தாளேயொழிய சாந்தி வாயே திறக்கவில்லை. ஆனால் அழவும் இல்லை. அவளுடைய துக்கமெல்லாம் சிறுகச் சிறுக எப்படியோ அந்த நேரத்தில் மறந்து போயிருந்தது போல் இருக்கிறது. கருணாகரனது மனைவியும் விடுவதாயில்லை. பிடிவாதமாக அவளிடம் பேசிக் கொண்டேதான் வந்தாள். இறுதியில் குழந்தையின் மனம் இளகி விட்டது. மெதுவாகத் தனது சிறிய வாயைத் திறந்து சோ...ந்...தி?? என்று கூறிவிட்டு டப்பென்று மூடிக் கொண்டு விட்டாள். அதற்குள் காரும் பங்களாவின் வாசலில் வந்து நின்றது. முதலில் கருணாகரன் இறங்கினார். பிறகு கற்பகம்மாளின் கையைப் பிடித்துக் கொண்டு சாந்தி மெதுவாகக் கீழே இறங்கினாள். காரிலிருந்து இறங்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காப்டன்_குமார்.pdf/49&oldid=791286" இலிருந்து மீள்விக்கப்பட்டது