பக்கம்:காப்டன் குமார்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 பெரியவரின் முகத்தை ஒரு கணம் உற்று நோக் கினாள் சாந்தி; அவருடைய பிடியில் ஒருவித ஆறுதல் - அமைதி இருப்பதாக அவளது மனம் அறி வித்தது. மெளனமாகப் பின் தொடர்ந்தாள். இரு வரும் துறைமுகக் கேட்டைக் கடந்து ஒர் அழகான பெரிய காரின் முன் வந்து நின்றனர். உள்ளே அழகிய - ஆனால் சற்று. வயதான ஒர் அம்மாள் உட்கார்ந்திருந்தாள். எஜமானரைக் கண்டதும் டிரைவர் காரின் கதவைத் திறந்து விட்டான். 'இந்தா... பார்த்தியா? 'குழந்தை இல்லை இல்லை’ என்று குறைப்பட்டுக் கொண்டிருந்தாயே, இந்தா பிடி, ஒரு குழந்தை” என்று தம் கண்களைச் சிமிட்டியவாறு சாந்தியை மனைவியின் கையில் ஒப்படைத்தார். ஒன்றும் புரியாமல் அந்த அம்மாள் ஒரு கணம் விழித்தாள். ஏதோ காரியமாக, கையை வீசிக் கொண்டு சென்ற கணவர்; கையில் குழந்தையுடன் வரும்போதே அவள் ஆச்சரியப் பட்டாள்; இப்போது அது இன்னும் அதிகமாயிற்று. துறைமுகத்தில் குழந்தைகளை ஏலம் போடு கிறார்களா; இல்லை கப்பலில் சரக்குகளுக்குப் பதில் குழந்தைகளாக இறங்குகின்றனவா? எப்படியிருந் தால் என்ன? குழந்தையை ஒருகணம் உற்றுநோக்கி னாள்? அதன் வசீகரமான தோற்றமும் அழகும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காப்டன்_குமார்.pdf/48&oldid=791284" இலிருந்து மீள்விக்கப்பட்டது