பக்கம்:காப்டன் குமார்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

  • ஒன்றும் சந்தோஷமாக இருந்துவிடவில்லை. கொஞ்சிப் பேசியும், சிரித்து ஏமாற்றியும் அண்ணன் நினைவை மறக்கடித்திருந்தேன். மருந்தின் வேகம் தீர்ந்துவிட்டது; இயற்கையின் தீவிரம் தலைதுாக்கி விட்டது. அடுத்த கப்பலில் நாம் புறப்படுகிறவரையில் இங்கே இவளை வைத்துக்கொண்டு சமாளிக்க முடியாது. பெண் ஏங்கியே செத்துவிடுவாள்!’’
  • பின்னே என்னதான் செய்வது?

பேசாமல் பிளேனிலேயே மூட்டையைக் கட்டிக் கொண்டு புறப்பட்டு விடுவோம்!??

  • அந்தக் கப்பல் சென்னை வந்து சேர நாலு நாளாகுமே!??

o ஆகட்டுமே! அதுவரை சாந்தி சென்னையில் நம்மோடு இருக்கட்டும்.’’ 'சரி...சரி...கப்பல் வருகிற அன்று துறைமுகத் திற்குப் போய் இவள் அண்ணனைச் சந்திக்கலாம் என்று சொல்லுகிறாயா??? 'சந்தித்து??-- கருணாகரன் ஒரு கணம் தம் மனைவியைக் கூர்ந்து கவனித்தார். சாந்தியை நாம் ஏன் அவள் அண்ணனிடம் ஒப்பிக்க வேண்டும்? நாமே வைத்துக் கொண்டு விட்டால் என்ன?’ என்கிற அவள் பேச்சின் உள் அர்த்தம் விளங்காமலே அவர் கேட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காப்டன்_குமார்.pdf/55&oldid=791302" இலிருந்து மீள்விக்கப்பட்டது